தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tamil Nadu Public Service Commission (TNPSC) Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 14.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. கூட்டுறவு சங்கங்களில் ஆய்வாளர், கூட்டுறவுத் துறை – 14 பதவிகள்
2. இளநிலை பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை – 1 பதவி
மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 15 பதவிகள்
கல்வித் தகுதி (15-09-2022 அன்றுள்ளபடி):
1. கூட்டுறவு சங்கங்களில் ஆய்வாளர், கூட்டுறவுத் துறை
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs விண்ணப்பதாரர்கள் குறைந்தப்பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்ற விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(வணிகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமையும், அல்லது கூட்டுறவு மேலாண்மையில் உயர் டிப்ளோமா, மெட்ராஸ் கூட்டுறவு மேலாண்மை நிறுவனம் அல்லது மதுரையில் உள்ள கூட்டுறவு மேலாண்மை நிறுவனம் வழங்கியது. பெற்றவர்களுக்கு அடுத்த முன்னுரிமையும் வழங்கப்படும்.)
2. இளநிலை பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு [01.07.2022 அன்றுள்ளபடி]:
1. கூட்டுறவு சங்கங்களில் ஆய்வாளர், கூட்டுறவுத் துறை
i) ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்) மற்றும் பட்டியல் பழங்குடியினர் – 37 வயது
நிறைவடைந்தவராக இருத்தல் கூடாது.
ii) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
(இஸ்லாமியர் அல்லாதவர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) – 34 வயது
நிறைவடைந்தவராக இருத்தல் கூடாது.
iii) “ஏனையோர்” ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் அல்லாதவர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) தவிர] – 32 வயது
நிறைவடைந்தவராக இருத்தல் கூடாது.
2. இளநிலை பண்டக காப்பாளர், நிலை – II, தொழில் மற்றும் வர்த்தகத் துறை
i) ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் அல்லாதவர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) – வயது வரம்பு இல்லை.
ii) “ஏனையோர்” ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் அல்லாதவர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) தவிர] – 32 வயது
நிறைவடைந்தவராக இருத்தல் கூடாது.
சம்பள விகிதம்:
தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட ஊதிய விதிகள் நிலை 10 -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 20,600/- முதல் அதிகப்பட்சம் ரூ. 75,900/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட செல்லுபடியாகும் காலத்திற்குள் பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள்ஒரு முறை பதிவு முறையில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் ரூ. 150/- பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். அவ்வாறு பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் தற்போது பதிவுக் கட்டணம் ரூ. 150/- பணம் செலுத்த வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது ஆரம்பத் தேர்வு கட்டணம் ரூ. 100/- பணம் செலுத்தப்பட வேண்டும்.
பட்டியல் சாதி/ பட்டியல் சாதி (அருந்ததியர்கள்) மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
ஆரம்பத் தேர்வு கட்டணமாக ரூ. 100/- நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு அல்லது ஆஃப்லைனில் பாரத ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கியில் செலுத்தலாம். இத்துடன் விண்ணப்பதாரர்கள் பொருந்தும் வகையில் சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
டிமாண்ட் ட்ராப்ட் / மணி ஆர்டர் போன்றவற்றின் மூலம் செலுத்தப்படும் ஆஃப்லைன் கட்டண முறைகளுடன் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்று நகல், சாதிச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், வருமானச்சான்று நகல், முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் (நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்) ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பகுதி அ:
கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு (பத்தாம் வகுப்புத் தரம்)/ பொது ஆங்கிலம் (பத்தாம் வகுப்புத் தரம்) – 100 வினாக்கள் / 150 மதிப்பெண்
பகுதி ஆ:
பொது அறிவு (75 வினாக்கள்) (மேல்நிலை வகுப்புத் தரம்) மற்றும் திறனறிவுத் தேர்வு (25 வினாக்கள்) (பத்தாம் வகுப்புத் தரம்) 100 வினாக்கள் / 150 மதிப்பெண்
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2022
டிஎன்பிஎஸ்சி அரசு இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்