You dont have javascript enabled! Please enable it!

தேனி மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 03 February 2023

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2023

தமிழ்நாடு அரசு மாநில நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2023

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் – நலவாழ்வு மையம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2023

Recruitment for the post of Contractual Staff Nurses Notification 2023

National Health Mission Tamil Nadu, Department of Health & Family Welfare Govt. of Tamil Nadu, India Recruitment Notification 2023



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேனி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் (Urban Health and Wellness Centres) மற்றும் துணை சுகாதார நிலையம் – சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் (HSCs – Health and Wellness Centres) ஆகியவற்றில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 03/02/2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) நேரடி





பணியிட விபரங்கள்:

1. செவிலியர்கள் (Staff Nurses)

மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை – 27

கல்வித்தகுதி:

i) செவிலியர் பட்டயப்படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing).

அல்லது

ஒருங்கிணைந்த பாடத் திட்டம் கொண்ட இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc. Nursicg with Integrated Curriculum).

ii) தமிழ்நாடு செவிலியம் மற்றும் தாதியர் குழுமத்தில் (Tamil Nadu Nursing council) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

மேற்குறிப்பிட்ட தகுதிகளை கொண்ட அதிகப்பட்சம் 50 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

தேசிய நல வாழ்வு குழும வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஊதியம் (குறைந்தப்பட்சம் ரூ. 18,000) வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தினை டவுண்லோட் செய்து சுய விண்ணப்பத்தில் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்து தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்ப உறையின் மீது என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை கட்டாயம் குறிப்பிடவும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.




அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Govt Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அரசின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Govt Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Recruitment Notification) மற்றும் விண்ணப்பத்தை (Official Application Form) தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயற்செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், பல்துறை அலுவலக வளாகம்-1, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம், தேனி மாவட்டம்-625531.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 30-01-2023

இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! Today is the Last Day! விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்