You dont have javascript enabled! Please enable it!

வேலூர் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள் 10 August 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மத்திய சிறை வேலூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Central Prison, Vellore Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலூர், மத்திய சிறையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் புதியதாக பணி நியமனம் செய்யும் பொருட்டு, செயல்முறை தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மத்திய சிறையில் நடைபெறவுள்ளது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. சிப்ப எழுத்தர் (Packer Clerk) – 2 பதவிகள்

2. சமையலர் (Cook) – 1 பதவி

3. தோட்ட காவலர் (Garden Watchman) – 1 பதவி

4. தூய்மைபணியாளர் (Sanitary Worker) – 7 பதவிகள்

காலிப்பணியிடங்கள் மொத்தம்: 11 பதவிகள்

கல்வித்தகுதி:

1. சிப்ப எழுத்தர் (Packer Clerk)

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

03 ஆண்டுகளுக்கு குறையாமல் பல்வேறு பேக்கிங் செய்த அனுபவம்

2. சமையலர் (Cook)

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

சமையலில் இரண்டு வருடங்களுக்குக் குறையாத காலத்திற்கு முந்தைய அனுபவம்.

3. தோட்ட காவலர் (Garden Watchman) 

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

4. தூய்மைபணியாளர் (Sanitary Worker) 

தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் OC விண்ணப்பதாரர்கள் 32 வயது வரையும், MBC, BC, BC(M) விண்ணப்பதாரர்கள் 34 வயது வரையும், SC, SCA, ST விண்ணப்பதாரர்கள் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

1. சிப்ப எழுத்தர் (Packer Clerk)

(நிலை 2) ரூ. 15,900 – 50,400

2. சமையலர் (Cook)

(நிலை 2) ரூ. 15,900 – 50,400

3. தோட்ட காவலர் (Garden Watchman) 

(நிலை 1) ரூ. 15,700 – 50,000

4. தூய்மைபணியாளர் (Sanitary Worker) 

(நிலை 1) ரூ. 15,700 – 50,000

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிகளுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் (ஆண்கள் – Male மற்றும் பெண்கள் – Female) உரிய கல்வி, ஜாதி சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களை (Xerox) விண்ணப்பத்துடன் இணைத்து தபால் மூலம் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களின் நகல்கள் (மதிப்பெண் சான்றிதழ் / மாற்று சான்றிதழ்), வயது வரம்பு சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல் (Employment Registration Card), சாதி சான்றிதழ் மற்றும் அனுபவ சான்றிதழ் நகல் (தேவைப்படின்) இணைக்கப்பட வேண்டும்.

தோட்ட காவலர் (Garden Watchman) மற்றும் தூய்மைபணியாளர் (Sanitary Worker) பணியிடங்களுக்கு கல்வி சான்றிதழ் அவசியமில்லை. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

முன்னுரிமை கோரும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட சான்றிதழ்களின் நகல்கள் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ரூ. 22/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயமுகவரியிட்ட (Self Addressed Cover) உறை ஒன்று விண்ணப்பத்துடன் இணைத்து கீழ்காணும் முகவரிக்கு கிடைக்குமாறு தபாலில் அனுப்ப வேண்டும். (குறித்த தேதிக்கு பின்னர் அலுவலகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை, வேலூர் – 632 002.




தேர்வு செய்யப்படும் முறை:

செயல்முறை தேர்வு, எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மத்திய சிறையில் நடைபெறவுள்ளது. சான்றிதழ்கள் சரிபார்த்தலில் தகுதியின் அடிப்படையில் நேர்காணலுக்கு, வேலூர் மத்திய சிறையிலிருந்து அழைப்பாணை கடிதம் மூலம் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்படுவோர் செயல்முறை தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ள முடியும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10-08-2022-க்குள் கோவை மத்திய சிறையில் கிடைக்கும் வண்ணம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்படி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

மாவட்ட அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்