பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் – பெல் நிறுவனம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Bharat Heavy Electricals Limited – BHEL Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட். சுருக்கமாக பெல் (பிஹெச்இஎல்) எனப்படும் பெல் நிறுவனத்தில் ஒப்பந்த பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பதவியின் (Apprenticeship training) மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. டிப்ளமோ தொழில்நுட்ப வல்லுநர் (Diploma Technician)
துறைகள்:
a) Electronics and Communication – 06
b) Mechanical – 52
c) Electrical and Electronics – 06
d) Computer Science Engineering/ Information Technology – 15
e) Civil – 10
f) Instrumentation & Control – 01
மொத்த பணியிடங்கள்: 90 பதவிகள்
கல்வித்தகுதி:
மேற்படி பதவிகளுக்கு சம்பத்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.*
*UR/OBC/EWS விண்ணப்பதாரர்கள் 70% மதிப்பெண்களும் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்கள் 60% மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01-08-2022 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 18 வயதிற்கும் மேற்பட்ட அதிகப்பட்சம் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் (பொது பிரிவினருக்கு) விண்ணப்பிக்கலாம்.
OBC பிரிவினர்கள் அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST பிரிவினர்கள் அதிகப்பட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாதாந்திர உதவித்தொகையாக ரூ. 8,000/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளுக்கு பொருந்தும் அடிப்படை நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே அசஸ்மெண்ட் தேர்விற்கு அழைக்கப்படுவர். பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அசஸ்மெண்ட் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் ஐடி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் மட்டும் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://www.mhrdnats.gov.in என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
1) www.mhrdnats.gov.in க்குச் செல்லவும்.
2) Enroll என்பதைக் கிளிக் செய்யவும்.
3) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும்.
4) ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.
தயவுசெய்து கவனிக்கவும்:
பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள். ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைத்தவுடன்
1) https://trichy.bhel.com/ க்குச் செல்லவும்.
2) Apprenticeship Application Portal (TRICHY) என்பதை கிளிக் செய்யவும்.
3) Register என்பதை கிளிக் செய்யவும். I Agree என்பதை கிளிக் செய்யவும். பின்னர் மீண்டும் Register என்பதை கிளிக் செய்யவும்.
4) OTP பெறுவதற்காக இமெயில் ஐடி அல்லது மொபைல் எண்ணை உள்ளிட்டு சர்பார்க்கவும்.
5) தற்போது மீண்டும் யூசர் நேம் மற்றும் பாஸ்வார்டு கொடுத்து Login செய்யவும்.
6) ஆன்லைன் அப்ளிகேஷனை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றிதழ்களை அப்லோடு செய்து apply என்பதைக் கிளிக் செய்யவும்.
7) பிரிண்ட் செய்து கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 07-09-2022
BHEL -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
BHEL -ன் அதிகாரப்பூர்வ அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்
BOAT -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!