You dont have javascript enabled! Please enable it!

TNWC – தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu Warehousing Corporation – TNWC Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் (தமிழக அரசு சார்பு நிறுவனம்) வேளாண் உற்பத்தி (மேம்பாடு மற்றும் கிடங்கு) கார்ப்பரேஷன் சட்டம், 1956ன் கீழ் நிறுவப்பட்டது, அதன் செயல்பாடுகள் மே 2, 1958 முதல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு கிடங்கு கழகம் கடலூர், மேட்டுப்பாளையம், திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மற்றும் திருச்சிராப்பள்ளி 7 ​​மண்டலங்களுடன் செயல்பட்டு வருகிறது, ஒவ்வொன்றும் காஞ்சிபுரம் முதுநிலை மண்டல மேலாளர்/மண்டல மேலாளர் கட்டுப்பாட்டில் உள்ளது. கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) நேரடி

பணியிட விபரங்கள்:

1. பதிவு எழுத்தர்/அட்டெண்டர் (Record Clerk/Attender) – 2 பதவிகள்

2. அலுவலக உதவியாளர் (Office Assistant) – 13 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 15 பதவிகள்

கல்வித் தகுதி:

1. பதிவு எழுத்தர்/அட்டெண்டர் (Record Clerk/Attender)

10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர் (Office Assistant)

i) 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

iii) சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (01-01-2022 ஆம் தேதியின்படி):

i) OC பிரிவினர் 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) MBC/ DC/ BC பிரிவினர்கள் 34 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) SC/ SC(A)/ ST பிரிவினர்கள் 37 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. பதிவு எழுத்தர்/அட்டெண்டர் (Record Clerk/Attender)

மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 15,900/- முதல் அதிகப்பட்சம் ரூ. 50,400/- வரை வழங்கப்படும்.

2. அலுவலக உதவியாளர் (Office Assistant)

மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 15,700/- முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000/- வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பதவிகளுக்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதிகாரப்பூர்வ மாதிரி விண்ணப்பத்தை மட்டுமே புகைப்படத்துடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். இணைக்கப்படும் சான்றிதழ்களில் சுய சான்றொப்பம் இட்டு (Sel Attested Xerox copies only) அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையின் மீது எந்த பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக ” Application for the post of ——————— பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்பிக்க வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

நிர்ணயிக்கப்பட்ட காலவரம்பிற்குள் வரும் விண்ணப்பங்களை மட்டுமே பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். நேர்காணலுக்கு விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட நாளில் / நேரத்தில் தனது சொந்த செலவில் / பொறுப்பில் அனைத்து அசல் சான்றுகளுடன் ஆஜராக வேண்டும். எவ்வித காலதாமதமோ / காரணங்களோ ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்

TNWC அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application)  இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

General Manager, Tamil Nadu Warehousing Corporation, 82, Anna Salai, Guindy, Chennai – 600 032



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்