You dont have javascript enabled! Please enable it!

இன்று கடைசிநாள் | 3,552 காலிப்பணியிடங்கள் | தமிழ்நாடு அரசு காவல்துறை வேலைவாய்ப்பு

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Notification for Common Recruitment of Gr.II Police Constables, Gr.II Jail Warders & Firemen

தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

TNUSRB Recruitment Notification 2022 | Tamil Nadu Uniformed Services Recruitment Board Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2022

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. இரண்டாம் நிலை காவலர் (Gr.II Police Constables)

2. இரண்டாம் நிலை சிறைக் காவலர் (Gr.II Jail Warders)

3. தீயணைப்பாளர் (Firemen)

கல்வித்தகுதி:

(i). விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக 10-ம் வகுப்பு/SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கோரும் 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதிக்கான சான்றிதழை ஏற்றுக்கொள்வதற்குரிய சமநிலைச் (equivalence) சான்றிதழை பெற்று பதிவேற்றம் செய்திடல் வேண்டும். அவ்வாறு சமநிலைச் (equivalence) சான்றிதழை பெற்று பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் 10-ம் வகுப்பு தேர்ச்சி இணைக்கல்விச் சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது.

(ii). விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.

(iii). பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆண்டின் ஜூலை மாதம் முதல் தேதியன்று 18 வயது நிறைவுற்றவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பிற்கான தளர்வுகள் பின்வருமாறு:

பிரிவு உச்ச வயது வரம்பு
பொதுப் பிரிவு 26 வயது
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 28 வயது
ஆதிதிராவிடர் / ஆதிதிராவிடர் (அருந்ததியர்) / பழங்குடியினர் 31 வயது
திருநங்கைகள் 31 வயது
ஆதரவற்ற விதவைகள் 37 வயது
முன்னாள் இராணுவத்தினர், முன்னாள் மத்திய துணை இராணுவப்படையினர் மற்றும் இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்குப் பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள இராணுவ மற்றும் மத்திய துணை இராணுவப் படை வீரர்கள் 47 வயது




விண்ணப்பக் கட்டணம்:

தேர்வுக் கட்டணம் ரூபாய்.130/-. விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணத்தை வங்கியின் ரொக்க செலுத்துச்சீட்டு மூலம் அல்லது இணையவழி கட்டணம் மூலம் செலுத்தலாம். தேர்வு கட்டணத்தை மேலே குறிப்பிடாத வேறுவழிகளில் செலுத்தினால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விருப்பமுள்ள நபர்கள் 30-06-2022 முதல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வமான வேலைவாய்ப்பு போர்ட்டல் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




தேர்வு செய்யப்படும் முறை:

வ.எண் விவரங்கள் மதிப்பெண்கள்
1 முதன்மை எழுத்துத் தேர்வு 80 மதிப்பெண்கள்
2 உடல்திறன் போட்டிகள் 15 மதிப்பெண்கள்
3 சிறப்பு மதிப்பெண்கள் 5 மதிப்பெண்கள்
மொத்தம் 100 மதிப்பெண்கள்

பகுதி – I, தமிழ் மொழி தகுதித்தேர்வு:

i. தமிழ் மொழி தகுதித்தேர்வில் தகுதி பெறுவது கட்டாயமாகும்.

ii. இத்தேர்வானது கொள்குறி வகை வினாதாளாக இருக்கும்.

iii. இத்தேர்வானது 80 மதிப்பெண்கள் 80 வினாக்களை கொண்டது. இத்தேர்விற்கான காலஅளவு 80 நிமிடங்கள். (1 மணி 20 நிமிடங்கள்).

iv. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40% மதிப்பெண்கள் பெற்று தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுடைய முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைதாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

v. தமிழ் மொழித் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் எந்த நிலையிலும் தற்காலிகத் தேர்வுப் பட்டியலைத் தயாரிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

பகுதி – II, முதன்மை எழுத்துத் தேர்வு:

i) பகுதி – அ: பொது அறிவு – 50 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா) பகுதி – ஆ: உளவியல் – 30 மதிப்பெண்கள் (கொள்குறி வகை வினா)

ii) எழுத்துத் தேர்வுக்கான நேரம் 1 மணி 20 நிமிடங்கள்

iii) எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 28 மதிப்பெண்கள் பெற வேண்டும்

விண்ணப்பம் தொடங்கும் நாள்: 07.07.2022

அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யங்கள்

[PDF] பாடத்திட்டங்கள் (Syllabus) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்