தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
VaazhndhuKaattuvom Thittam Recruitment Notification 2022 | TNRTP Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்) உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படும் அரசு திட்டம். இத்திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவிநாசி, உடுமலைபேட்டை, குண்டடம் மற்றும் பொங்கலூர் ஆகிய ஐந்து வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இவ்வட்டாரங்களில் வட்டாரங்களில் அமைக்கப்படும் சமுதாய திறன் பள்ளி மற்றும் சமுதாய பண்ணை பள்ளிகளை வலுப்படுத்தும் விதமாக வேளாண்மை, கால்நடை மற்றும் பண்ணை சாரா தொழில்களுக்கு மாவட்ட அளவிலான வள பயிற்றுநர் (District Resource Person) நியமிக்கப்படவுள்ளனர்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால்/ நேரடி |
பணியிட விபரங்கள்:
1. மாவட்ட அளவிலான வள பயிற்றுநர்கள் (District Resource Persons)
கல்வித் தகுதி:
மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம் அல்லது தொடர்புடையதுறையில் இளங்கலை பட்டம் அல்லது முதுகலைபட்டம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய துறையில் 10 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தொடர்புடைய மாவட்டத்தை சேர்ந்தவராக அல்லது அம்மாவட்டத்தில் குடியேறியவராக இருத்தல் வேண்டும். மதிப்பு சங்கிலி ஒருங்கிணைத்தல் மற்றும் வேளாண் பொருட்களை மேம்படுத்துவதில் போதிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கிராமபுறங்களில் உள்ள மக்களுக்கு பயிற்சி அளிப்பதில் ஆர்வமுள்ளவராக இருத்தல் வேண்டும். சர்வதேச நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், சிவில் சொசைட்டிகளில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பள விகிதம்:
தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு ஒரு நாளுக்கான மதிப்பூதியமாக ரூ.2000/- மற்றும் உள்ளூர் போக்குவரத்துக்காக ரூ.250/- வழங்கப்படும். மாவட்ட வள பயிற்றுநருக்கான பணி ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு மிகாமல் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
i) விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதிச் சான்றுகளின் சான்றிட்ட நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ii) விண்ணப்பதாரர் விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் மற்றும் கைபேசி எண் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
iii) விண்ணப்பதாரர் விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்து சான்றிதழ்களும் சுய சான்றொப்பம் (Self Attested) இட்ட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 10.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிடலாம்
TNRTP -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்துகாட்டுவோம் திட்டம்,ஓப் (தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம்) மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, # 713 & 714, மாவட்ட ஆட்சியரக 7-வது தளம், திருப்பூர் மாவட்டம். தொலைபேசி எண்: 0421-2999723
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!