You dont have javascript enabled! Please enable it!

TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 21 February 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வேலை வாய்ப்புகள் 2022

Tamil Nadu Public Service Commission (TNPSC) Recruitment 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு கூட்டுறவு சேவையில் கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநர் பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்காக 21.02.2022 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குனர் (Assistant Director of Co-operative Audit)

கல்வித் தகுதி (21-01-2022):

பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் விண்ணப்பதாரர்கள் பின்வரும் அல்லது அதற்கு சமமான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்:

i) M.A (Co-operation)
அல்லது
ii) M.Com., with (Co-operation) as a subject
அல்லது
iii) M.Com., (without Co-operation as a subject) plus Higher Diploma in Co-operation
அல்லது
iv) பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (Institute of Chartered Accountants) நடத்தும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு:

01-07-2022 ஆம் தேதியின் படி எஸ்சி, எஸ்சி (எ), எஸ்டி, எம்பிசி/ டிசி, பிசி (ஓபிசிஎம்), பிசிஎம் மற்றும் அனைத்து ஜாதியிலும் விதவைகளுக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 58 ஆகும்.

மற்ற அனைவரும் 30 வயதினை நிறைவு செய்திருக்கக் கூடாது.



சம்பள விகிதம்:

தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட ஊதிய விதிகள் நிலை 20 -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 56,100/- முதல் அதிகப்பட்சம் ரூ. 1,77,500/- வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட செல்லுபடியாகும் காலத்திற்குள் பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள்ஒரு முறை பதிவு முறையில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் ரூ .150/- பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். அவ்வாறு பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் தற்போது பதிவுக் கட்டணம் ரூ .150/- பணம் செலுத்த வேண்டும்.

இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது ஆரம்பத் தேர்வு கட்டணம் ரூ .200/- பணம் செலுத்தப்பட வேண்டும்.

பட்டியல் சாதி/ பட்டியல் சாதி (அருந்ததியர்கள்) மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

ஆரம்பத் தேர்வு கட்டணமாக ரூ .200/- (ரூபாய் இருநூறு மட்டுமே) நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு அல்லது ஆஃப்லைனில் பாரத ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கியில் செலுத்தலாம். இத்துடன் விண்ணப்பதாரர்கள் பொருந்தும் வகையில் சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

டிமாண்ட் ட்ராப்ட் / மணி ஆர்டர் போன்றவற்றின் மூலம் செலுத்தப்படும் ஆஃப்லைன் கட்டண முறைகளுடன் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்‌ சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ கல்வித்தகுதிக்கான சான்று நகல்‌, சாதிச்சான்று நகல்‌, இருப்பிடச்சான்று நகல்‌, வருமானச்சான்று நகல்‌, முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல்‌, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல்‌ (நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்‌) ஆதார்‌ மற்றும்‌ குடும்ப அட்டை நகல்‌ ஆகிய ஆவணங்களுடன்‌ கீழ் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.



தேர்வு செய்யப்படும் முறை:

தாள் – I:

படிப்ப துறை வகை தாள் (Paper-I : Subject paper)

தாள் – II:

பாகம் 1. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

பாகம் 2. பொது அறிவு

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

 விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 21.02.2022 மாலை 5.00 மணிக்குள்‌

டிஎன்பிஎஸ்சி அரசு இணையதளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்