தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வேலை வாய்ப்புகள் 2021
Tamil Nadu Public Service Commission (TNPSC) Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது ஷேர்சாட் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள அரசுத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்புக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 24.09.2021 வரை ஆன்லைன் முறையில் மட்டுமே தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. உதவி அரசு வழக்கறிஞர் (Assistant Public Prosecutor)
கல்வித் தகுதி:
i) அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து சட்டத்தில் பட்டம் (B.L) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ii) பார் உறுப்பினராக இருக்க வேண்டும்.
iii) போதுமான தமிழ் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
மற்றும்
iv) அனுபவம்: ஐந்து வருடங்களுக்கு குறையாத காலத்திற்கு கிரிமினல் நீதிமன்றங்கள் செயலில் பயிற்சி பெற்றிருக்க பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
எஸ்சி, எஸ்சி (எ), எஸ்டி, எம்பிசி/ டிசி, பிசி (ஓபிசிஎம்), பிசிஎம் மற்றும் அனைத்து ஜாதியிலும் விதவைகளுக்கு அதிகப்பட்ச வயது வரம்பு 58 ஆகும்.
மற்ற அனைவரும் 34 வயதினை நிறைவு செய்திருக்கக் கூடாது.
சம்பள விகிதம்:
தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட ஊதிய விதிகள் (நிலை 22) படி குறைந்தப்பட்சம் ரூ. 56,100 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,77,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட செல்லுபடியாகும் காலத்திற்குள் பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள்ஒரு முறை பதிவு முறையில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் ரூ .150/- பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். அவ்வாறு பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் தற்போது பதிவுக் கட்டணம் ரூ .150/- பணம் செலுத்த வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது ஆரம்பத் தேர்வு கட்டணம் ரூ .100/- பணம் செலுத்தப்பட வேண்டும்.
பட்டியல் சாதி/ பட்டியல் சாதி (அருந்ததியர்கள்) மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
ஆரம்பத் தேர்வு கட்டணமாக ரூ .100/- (ரூபாய் நூறு மட்டுமே) நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு அல்லது ஆஃப்லைனில் பாரத ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கியில் செலுத்தலாம். இத்துடன் விண்ணப்பதாரர்கள் பொருந்தும் வகையில் சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
டிமாண்ட் ட்ராப்ட் / மணி ஆர்டர் போன்றவற்றின் மூலம் செலுத்தப்படும் ஆஃப்லைன் கட்டண முறைகளுடன் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் சுய விபரங்களுடன் கூடிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதிக்கான சான்று நகல், சாதிச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், வருமானச்சான்று நகல், முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல் (நாளது
தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்) ஆதார் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் (i) ப்ரெலிமினரி தேர்வு (ஆப்ஜெக்டிவ் டைப்), (ii) எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம்: 24.09.2021 மாலை 5.00 மணிக்குள்
டிஎன்பிஎஸ்சி அரசு இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!