TNPSC குரூப் 4 தேர்வு 2022 தேர்வு எழுதுவதற்கான தகுதிகள், பாடத்திட்டம், மாதிரிவினாத்தாள்கள் என அனைத்து தகவல்களின் முழு விவரங்களையும் இங்கு நாம் தெளிவாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம்.
குரூப் 4 தேர்வு என்றால் என்ன?
குரூப் 4 தேர்வு என்பது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (Tamil Nadu Public Service Commission – TNPSC) நடத்தப்படும் ஒரு வகையானத் தகுதி தேர்வு ஆகும்.
இந்தத் தேர்வின் மூலமாக இளநிலை உதவியாளர் (பிணையம்), இளநிலை உதவியாளர் (பிணையமற்றது), தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித் தண்டலர், வரைவாளர், மற்றும் நில அளவர் போன்ற பலவிதமான அரசு பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இத்தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC ஆண்டுத்தொறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வு குறித்து இங்கு தெளிவாக பார்க்கலாம்.
குரூப் 4 தேர்வு பற்றிய அறிமுக குறிப்பு:
தேர்வின் பெயர்:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு
தேர்வை நடத்தும் அமைப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC
பதவிகளின் பெயர்கள்:
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், வரைவாளர், மற்றும் நில அளவர்
மொத்த காலிப்பணியிடங்கள்:
வருடம் தோறும் பத்தாயிரத்திற்கும் மேல்
கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி
மாத சம்பளம்:
ரூ. 19,500 முதல் ரூ. 65,000 வரை ஊதியம் தரப்படும்
குரூப் 4 தேர்வு நடைபெறும் முக்கிய நாட்கள்:
குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் மாதம்:
மார்ச் 2022
குரூப் 4 தேர்வுக்கான விண்ணப்பம் தொடங்கும் மாதம்:
3 வது வாரம், மார்ச் 2022
குரூப் 4 தேர்வு நடைபெறும் மாதம்:
ஜூலை 2022
குரூப் 4 தேர்வு முடிவு வெளியாகும் மாதம்:
செப்டம்பர் 2022
குரூப் 4 தேர்வு எழுத தேவையான தகுதிகள்:
குரூப் 4 தேர்வை எழுத குறைந்தப்பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பைப் பொறுத்தவரையில் குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
மேலும் அதிகப்பட்ச வயதானது விண்ணப்பதாரரின் கல்வி மற்றும் அவர் சார்ந்தப் பிரிவினை (Community) பொறுத்து மாறுபடும்.
அதிகப்பட்ச வயது வரம்பு:
பிரிவு (Community) | 10ஆம் வகுப்பு மட்டும் படித்தவர்களுக்கான அதிகப்பட்ச வயது வரம்பு |
பொதுப் பிரிவினர் | 30 |
MBC, BC, BC(M) | 32 |
SC, SC(A), ST | 35 |
ஆதரவற்ற விதவைகள் | 35 |
பொதுப்பிரிவினர் தவிர மற்றப் பிரிவை சேர்ந்த 10ஆம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 56 வயது ஆகும்.
குரூப் 4 தேர்வு முறை:
குரூப் 4 தேர்வானது மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். மேலும் இந்த தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.
தேர்வு எழுதுபவர்கள் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலம் இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்துக்கொள்ள முடியும்.
அதாவது தமிழைத் தேர்வு செய்பவர்களுக்கு வினாத்தாள் தமிழில் இருக்கும். மேலும் முழுமையான தகவல்கள் கீழே அட்டவணையில் விபரமாக கொடுக்கப்பட்டுள்ளது.
பாடப்பெயர் | வினாக்கள் எண்ணிக்கை | மதிப்பெண்கள் |
பொது தமிழ் (அல்லது) ஆங்கிலம் |
100 | 150 |
பொது அறிவு | 75 | 112.5 |
கணிதம் | 25 | 37.5 |
மொத்தம் | 200 | 300 |
குரூப் 4 தேர்வு 2021 பாடத்திட்டம்:
குரூப் 4 தேர்விற்கான பாடத்திட்டத்தை (Syllabus) 10 ஆம் வகுப்பு கல்வித் தரத்தில் வடிவமைத்துள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC.
TNPSC குரூப் 4 பாடத்திட்டத்தின் தகவல்களை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் சுருக்கமாக கீழே கொடுத்திருக்கிறோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பொது தமிழ்
- இலக்கணம்
- இலக்கியம்
- தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும்
General English
- Grammar
- Literature
- Authors and their Literary Works
பொது அறிவு / General Studies
- பொது அறிவியல்
- நடப்புநிகழ்வுகள்
- புவியியல்
- இந்திய அரசியல்
- இந்தியா & தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு
- இந்திய பொருளாதாரம்
- இந்திய தேசிய இயக்கம்
- திறனறிவு மற்றும் புத்திகூர்மை தேர்வு
முழு பாடத்திட்டத்தினையும் டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்