You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகப் பணி | TNPSC – தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு (ENGLISH REPORTER AND TAMIL REPORTER (TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) | விண்ணப்பிக்க கடைசிநாள்: 12 October 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tamil Nadu Public Service Commission (TNPSC) Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு சட்டப்பேரவை தலைமைச்செயலகப் பணிகளில் அடங்கிய ஆங்கில நிருபர் மற்றும் தமிழ் நிருபர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 12.10.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. ஆங்கில நிருபர் – 6 பதவிகள்

2. தமிழ் நிருபர் – 3 பதவிகள்

மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 9 பதவிகள்

கல்வித் தகுதி (23-08-2022):

1. ஆங்கில நிருபர் 

i) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) அதிவேகத் தேர்வில் நிமிடத்திற்கு 180 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் (shorthand) அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி.

iii) மூத்த வகுப்பில் (senior grade) ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி.

2. தமிழ் நிருபர்

i) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) அதிவேகத் தேர்வில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்தில் (shorthand) அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி.

iii) மூத்த வகுப்பில் (senior grade) தமிழில் தட்டச்சு செய்வதில் அரசு தொழில்நுட்பத் தேர்வில் தேர்ச்சி.

வயது வரம்பு [01.07.2022 அன்றுள்ளபடி]:

i) ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் அல்லாதவர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) – வயது வரம்பு இல்லை.

ii) “ஏனையோர்” ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர் மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர் அல்லாதவர்) மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்) தவிர] – 32 வயது
நிறைவடைந்தவராக இருத்தல் கூடாது.



சம்பள விகிதம்:

தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட ஊதிய விதிகள் நிலை 22 -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 56,100/- முதல் அதிகப்பட்சம் ரூ. 2,05,700/- வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட செல்லுபடியாகும் காலத்திற்குள் பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள்ஒரு முறை பதிவு முறையில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் ரூ. 150/- பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். அவ்வாறு பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் தற்போது பதிவுக் கட்டணம் ரூ. 150/- பணம் செலுத்த வேண்டும்.

இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது ஆரம்பத் தேர்வு கட்டணம் ரூ. 200/- பணம் செலுத்தப்பட வேண்டும்.

பட்டியல் சாதி/ பட்டியல் சாதி (அருந்ததியர்கள்) மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.

ஆரம்பத் தேர்வு கட்டணமாக ரூ. 100/- நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு அல்லது ஆஃப்லைனில் பாரத ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கியில் செலுத்தலாம். இத்துடன் விண்ணப்பதாரர்கள் பொருந்தும் வகையில் சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.

டிமாண்ட் ட்ராப்ட் / மணி ஆர்டர் போன்றவற்றின் மூலம் செலுத்தப்படும் ஆஃப்லைன் கட்டண முறைகளுடன் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள்‌ சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ கல்வித்தகுதிக்கான சான்று நகல்‌, சாதிச்சான்று நகல்‌, இருப்பிடச்சான்று நகல்‌, வருமானச்சான்று நகல்‌, முன்னுரிமை கோருவதற்கான சான்று நகல்‌, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு நகல்‌ (நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்‌) ஆதார்‌ மற்றும்‌ குடும்ப அட்டை நகல்‌ ஆகிய ஆவணங்களுடன்‌ கீழ் குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.



தேர்வு செய்யப்படும் முறை:

தாள் – 1

சுருக்கெழுத்து (பட்டப்படிப்புத் தரம்)

ஆங்கிலம் அல்லது தமிழ்

தாள் – 2

பகுதி அ:

கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10 ஆம் வகுப்பு தரம்)

பகுதி அ:

பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் அனைத்து தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.10.2022

டிஎன்பிஎஸ்சி அரசு இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்