தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வேலை வாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tamil Nadu Public Service Commission (TNPSC) Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு மாநில கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணிகளில் அடங்கிய கணக்கு அலுவலர் நிலை III பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 13.08.2022 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. கணக்கு அலுவலர் நிலை III (Accounts Officer, Grade-III)
மொத்த பணியிடங்கள்: 23 பதவிகள்
கல்வித் தகுதி (15-07-2022 அன்று):
பட்டய கணக்காளர்கள் / செலவு கணக்காளர்கள் நிறுவனம் நடத்தும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Must have passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants / Cost Accountants)
வயது வரம்பு:
01-07-2022 ஆம் தேதியின்படி ஆ.தி, ஆ.தி(அ), ப.ப, மி.பி.வ,சீ.ம., பி.வ, பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் வயது வரம்பு இல்லை
ஏனையோர்:
(i) 37 ஆண்டுகள் . தமிழ்நாடு அரசின் கீழ் பணியில் இருப்பவர்கள் *.
(ii) 32 ஆண்டுகள் மற்றஅனைத்து நபர்கள்
சம்பள விகிதம்:
தமிழ்நாடு அரசு திருத்தப்பட்ட ஊதிய விதிகள் நிலை 23-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 56,900/- முதல் அதிகப்பட்சம் ரூ. 2,09,200/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட செல்லுபடியாகும் காலத்திற்குள் பணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ஏற்கனவே ஒரு முறை பதிவு அமைப்பில் (one time registration) பதிவு செய்த விண்ணப்பதாரர்கள்ஒரு முறை பதிவு முறையில் பதிவு செய்து பதிவுக் கட்டணம் ரூ .150/- பணம் செலுத்தியவர்கள் மீண்டும் பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். அவ்வாறு பதிவு கட்டணம் செலுத்தாதவர்கள் தற்போது பதிவுக் கட்டணம் ரூ .150/- பணம் செலுத்த வேண்டும்.
இந்த ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது ஆரம்பத் தேர்வு கட்டணம் ரூ .200/- பணம் செலுத்தப்பட வேண்டும்.
பட்டியல் சாதி/ பட்டியல் சாதி (அருந்ததியர்கள்) மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
ஆரம்பத் தேர்வு கட்டணமாக ரூ .200/- (ரூபாய் இருநூறு மட்டுமே) நெட் பேங்கிங் / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு அல்லது ஆஃப்லைனில் பாரத ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கியில் செலுத்தலாம். இத்துடன் விண்ணப்பதாரர்கள் பொருந்தும் வகையில் சேவை கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
டிமாண்ட் ட்ராப்ட் / மணி ஆர்டர் போன்றவற்றின் மூலம் செலுத்தப்படும் ஆஃப்லைன் கட்டண முறைகளுடன் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் எண் மூலம் ஒருமுறைப்பதிவு எனப்படும் நிரந்தரப்பதிவு (OTR) மற்றும் தன்விவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயமாகும். விண்ணப்பதாரர்கள் நிரந்தர பதிவு மூலம் பதிவுக்கட்டணமாக ரூ.150/- ஐ செலுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருமுறைப்பதிவு, பதிவு செய்த நாள் முதல் ஐந்தாண்டுகள் வரை நடைமுறையிலிருக்கும், தங்களுக்குரிய ஒரு முறைப் பதிவு கணக்கு (One Time Registration ID) மற்றும் கடவுச் சொல் மூலமாக மட்டுமே விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தாள் -1
பாடத்தாள் COST ACCOUNTANCY (முதுகலைப்பட்டப் படிப்புத் தரம்)
தாள் -2
பகுதி-அ
கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)
பகுதி-ஆ
பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்)
தெரிவு இரண்டு நிலைகளை உடையது. 1. கணினி வழித் தேர்வு 2 நேர்காணல் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வு. இறுதி தெரிவானது விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விலும், வாய்மொழித் தேர்விலும் சேர்த்து பெற்ற மொத்த மதிப்பெண்கள் பணியிட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். விண்ணப்பதாரர் கணினி வழித் தேர்வின் அனைத்து பாடங்களிலும் வாய்மொழித் தேர்விலும் கலந்துகொள்வது கட்டாயமாகும். கணினி வழித் தேர்வின் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்வு எழுதாத (எழுத தவறி இருந்தாலும்) விண்ணப்பதாரர் அத்தெரிவிற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் கூட தெரிவு செய்யப்பட தகுதியானவராக கருதப்படமாட்டார். கணினி வழித் தேர்வு சென்னை (0101) தேர்வு மையத்தில் மட்டுமே நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.08.2022
டிஎன்பிஎஸ்சி அரசு இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்