You dont have javascript enabled! Please enable it!

TNPSC தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

TNPSC DCPO Recruitment Notification 2022




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு சீர்த்திருத்த பள்ளிகள் மற்றும் ஒழுக்க கண்காணிப்பு பணிகள் (தமிழ்நாடு சமூக பாதுகாப்பு பணியில்) அடங்கிய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 30.04.2022 அன்றுவரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும்.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பதவிக் குறியீட்டு எண். 3201) – 16 பதவிகள்

கல்வித்தகுதி (01.04.2022 அன்றுள்ளபடி):

விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியினை அல்லது அதற்கு இணையான
படிப்பினை பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது
பல்கலைக்கழக மானியக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க
வேண்டும்.

பல்கலைக்கழக மானியக் குழு அல்லது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தின் சமூகவியல் அல்லது சமூகப் பணி அல்லது உளவியல் அல்லது குழந்தை மேம்பாடு அல்லது குற்றவியல் ஆகியவற்றில் பட்டம்.

A degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology of any University or Institution recognized by the University Grants Commission or Institution recognized by the Government.

மற்ற விஷயங்கள் சமமாக இருந்தால், சமூகவியல் அல்லது சமூக பணி அல்லது உளவியல் அல்லது குழந்தை வளர்ச்சி அல்லது குற்றவியல் முதுகலை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Provided that other things being equal, preference shall be given to candidates possessing a Post Graduate degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology of any University or Institution recognized by the University Grants Commission or Institution recognized by the Government.

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கணினி செயல்பாடுகளில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு விரும்பத்தக்கது.

A Diploma or a Certificate course in Computer operations in the recognized Institutions is desirable.

வயது வரம்பு (0107.2022 அன்றுள்ளபடி):

விண்ணப்பதார்களின் இனவகைகள் அதிகபட்ச வயது
ஆதி, ஆ.தி(அ), ப.ப., மிபி.வசீம, பிவ, பி.வ(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள். வயது வரம்பு இல்லை
ஏனையோர் 32 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருக்க கூடாது




சம்பள விகிதம்:

சம்பள ஏற்ற முறை – ரூ. 56,100 – ரூ. 2,05,700 (நிலை-22)

விண்ணப்ப கட்டணம்:

ஒருமுறைப்பதிவு என்பது பதிவு செய்த நாள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர், விண்ணப்பதாரர், ஒருமுறைப்பதிவினை (One Time Registration), அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினைச் செலுத்தி கட்டாயம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் ஒருமுறைப்பதிவு என்பது தேர்வுக்கான விண்ணப்பத்திலிருந்து மாறுபட்டதாகும். விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் , தனித்தனியே இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

பதிவுக் கட்டணம்:

நிரந்திரப் பதிவுக்கட்டணம் (அ.ஆ(நி) எண்.32, பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்தத்துறை நாள் 01.03.2017- இன்படி திருத்தியமைக்கப்பட்ட கட்டணம்.
குறிப்பு:
நிரந்தர பதிவில் பதிவு செய்த நாளிலிருந்து ஐந்தாண்டுகள் முடிவுறாத விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கான பதிவுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றனர்.

ரூ.150/-
தேர்வுக் கட்டணம்:
குறிப்பு
கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கட்டணச் சலுகை பெற தகுதியுடையவர்கள் தவிர பிற விண்ணப்பதாரர்கள், இணையவழி விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும்போது தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
ரூ.200/-

குறிப்பு:
விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறைப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

தேர்வுக் கட்டணச் சலுகை:

வகை சலுகை
1) ஆதிதிராவிடர் ஆதிதிராவிடர்(அருந்ததியர்) கட்டணம் செலுத்த தேவையில்லை
2) பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை
3) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர் மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை
4) இஸ்லாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய வகுப்பினர் மூன்று முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை
5) முன்னாள் இராணுவத்தினர் இரண்டு முறை மட்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
6) ஆதரவற்ற விதவைகள் கட்டணம் செலுத்த தேவையில்லை

தேர்வு செய்யப்படும் முறை:

தெரிவு இரண்டு நிலைகளை உடையது . 1 கணினி வழித் தேர்வு 2 நேர்காணல் தேர்வு அமைந்த வாய்மொழித் தேர்வு. இறுதி தெரிவானது விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்விலும், வாய்மொழித் தேர்விலும் சேர்த்து பெற்ற மொத்த மதிப்பெண்கள் பணியிட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் . விண்ணப்பதாரர் கணினி வழித் தேர்வின் அனைத்து பாடங்களிலும் வாய்மொழித் தேர்விலும் கலந்துகொள்வது கட்டாயமாகும். கணினி வழித் தேர்வின் ஏதேனும் ஒரு பாடத்தில் தேர்வு எழுதாத (எழுத தவறி இருந்தாலும் ) விண்ணப்பதாரர் அத்தெரிவிற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றிருந்தாலும் கூட தெரிவு செய்யப்பட தகுதியானவராக கருதப்படமாட்டார்.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.04.2022

TNPSC இணையத்தளம் (TNPSC Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க (Apply Online) இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்