You dont have javascript enabled! Please enable it!

TNPFC – தமிழ்நாடு அரசு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்புகள் 2022

TNPFC – Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

TNPFC – தமிழ்நாடு மின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம், முழுவதுமாக தமிழக அரசுக்கு சொந்தமானது. ரிசர்வ் வங்கியில் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வாடகை கொள்முதல் நிதி நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பல்வேறு கவர்ச்சிகரமான வைப்புத் திட்டங்கள் மூலம் நிதி திரட்டுகிறது. இந்நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) இமெயில்





பணியிட விபரங்கள்:

1. உதவி மேலாளர்

2. இளநிலை மேலாளர்

3. இளநிலை உதவியாளர்

4. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் தனிப்பட்ட உதவியாளர்

கல்வித்தகுதி:

1. உதவி மேலாளர்

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் CA / CWA முடித்திருக்க வேண்டும்.

ii) சம்பந்தப்பட்ட துறையில் வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 5 ஆண்டுகள் முன் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2. இளநிலை மேலாளர்

i) குறைந்தபட்சம் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) கணினி (Certificate on Office Automation) அறிவுடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் சுருக்கெழுத்து உயர்நிலை மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு உயர்ந்தது அல்லது ஒன்று உயர்ந்தது ஒன்று தாழ்ந்தது.

3. இளநிலை உதவியாளர்

i) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் CA/ CWA அல்லது CA (Inter) / CWA (Inter) முடித்திருக்க வேண்டும்.

ii) சம்பந்தப்பட்ட துறையில் வங்கி அல்லாத நிதி நிறுவனம் ஏதேனும் ஒன்றில் குறைந்தப்பட்சம் 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் முன் பணி அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

4. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் தனிப்பட்ட உதவியாளர்

i) குறைந்தபட்சம் ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ii) கணினி Certificate on Office Automation முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு
பிரிவுகள் O.C B.C / M.B.C SC / ST
பொது 30 32 35

மேலும் அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.





சம்பள விகிதம்:

1. உதவி மேலாளர்

அரசின் ஊதிய விகிதம் Level 22-ன் படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் 56,000 மற்றும் அதிகப்பட்சம் 1,77,500 வழங்கப்படும்.

2. இளநிலை மேலாளர்

அரசின் ஊதிய விகிதம் Level 15-ன் படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் 36,200 மற்றும் அதிகப்பட்சம் 1,14,800 வழங்கப்படும்.

3. இளநிலை உதவியாளர்

அரசின் ஊதிய விகிதம் Level 11-ன் படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் 35,400 மற்றும் அதிகப்பட்சம் 1,12,400 வழங்கப்படும்.

4. தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரின் தனிப்பட்ட உதவியாளர்

அரசின் ஊதிய விகிதம் Level 8-ன் படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் 19,500 மற்றும் அதிகப்பட்சம் 62,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது தொலைபேசி வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை சரியாக நிரப்பவும்.

ii) சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும்‌ வகையில்‌ பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் அல்லது கீழ் குறிப்பிட்டுள்ள இமெயில் ஐடிக்கும் அனுப்பி வைக்கலாம்.

iii) விண்ணப்ப உறையின் மீது கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for the Post of ________” என்ன பதவி என்பதை தெளிவாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31-01-2022 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Chief Financial Officer, 490 3-4, “Tufidco Powerfin” Tower, Anna Salai, Nandanam, Chennai – 600 035

அல்லது

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:

cfo@tnpowerfinance.com.

TNPFC-ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

TNPFC-ன் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணைய பக்கம் (Official Career Page) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்