You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 27 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்புகள் 2022
Tamil Nadu Physical Education And Sports University – TNPESU Recruitment Notification 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. விரிவுரையாளர்

துறை:

யோகா (தொலைநிலைக் கல்விப் பள்ளி)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் யோகாவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். யுஜிசி அல்லது சிஎஸ்ஐஆர் அல்லது யுஜிசி அங்கீகாரம் பெற்ற SLET/SET நடத்தும் தேசிய தகுதித் தேர்வில் (NET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது M.Phil./Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் யோகா பிரிவில் Ph.D. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்ச வயது வரம்பு அரசின் விதிமுறைப்படி கடைபிடிக்கப்படும்.




சம்பள விகிதம்:

ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் மாதம் ரூ. 25,000/- வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

i) மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எஸ்சி/ எஸ்டி (சாதி சான்றிதழ் நகலை வழங்க வேண்டும்) மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு (பொருத்தமான சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்) ஆகியோர்கள் ரூ. 250/- செலுத்த வேண்டும்.

ii) மற்ற சமூகத்தினர் அனைவரும் ரூ. 500/- செலுத்த வேண்டும்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏதேனும் ஒன்றில் “The Registrar, Tamil Nadu Physical Education and Sports University” என்னும் பெயரில் சென்னையில் செல்லுபடியாகும் வகையில் டிமாண்ட் டிராப்ட் (DD) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் தரவரிசைப்படி தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேவையான கல்வி தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து புகைப்படத்துடன் நிரப்பி விண்ணப்பத்துடன்‌ தேவையான உரிய நகல் ஆவணங்களுடன் அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக பதிவு அஞ்சல் (Register Post) மூலமாக மட்டும் அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அடங்கிய உறையின் மேல் “Application for the post of GUEST LECTURER in YOGA (SDE)” என்பதை தெளிவாக எழுதப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27-04-2021

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Melakottaiyur(Po), Chennai – 600 127

TNPESU அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ம) விண்ணப்ப படிவத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்