You dont have javascript enabled! Please enable it!

சென்னை, தலைமைச் செயலகம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் வேலைவாய்ப்புகள் 2021

சென்னை, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வேலைவாய்ப்புகள் 2021

Tamil Nadu Government Secretariat Recruitment 2021 for Office Assistant



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009. அலுவலக உதவியாளர் பதவிக்கான விளம்பர அறிவிக்கை.

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ. 15,700 சம்பளத்தில் சென்னை, தலைமை செயலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை | Tamil Minutes

சென்னை, தலைமைச் செயலகம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை தலைமைச் செயலக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு சார்புச் செயலாளரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.12.2021 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி:

தமிழ்நாடு அடிப்படை பணி விதிகளுக்கான சிறப்பு விதி, விதி 5(2)(a) ன்படி அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (01-01-2021 -ன் படி):

i) பொதுப் பிரிவு (GT) அதிகப்பட்சம் 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC, BC(ஆ), MBC&DNC) அதிகப்பட்சம் 34 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவை (அனைத்து வகுப்பினர்) [SC/ST/DW (all Category)] அதிகப்பட்சம் 37 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iv) முன்னாள் இராணுவத்தினர் – ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (Ex-Servicemen-SC/ST/BC) அதிகப்பட்சம் 55 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

v) முன்னாள் இராணுவத்தினர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு அல்லாதோர் (Ex-Servicemen-Other than SC/ST/BC) அதிகப்பட்சம் 50 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

vi) மாற்றுத்திறனாளிகள் வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்




சம்பள விகிதம்:

(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் குறைந்தப்பட்சம் ரூ.15,700 முதல் அதிகப்பட்சம் 58,100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களின் கல்வித்தகுதி, இனம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு பட்டியலிடப்படும். அவ்வாறு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலின்போது 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் (ம) இதர அசல் சான்றிதழ்களுடன் வரப்பெற வேண்டும்.

நேர்காணலுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி / அகவிலைப்படி அளிக்கப்படமாட்டாது. விண்ணப்ப படிவத்தில் ஒட்டி அனுப்பப்பட்டுள்ள புகைப்படம் போன்று இரண்டு (2) புகைப்படங்கள் நேர்காணலின் போது எடுத்து வர வேண்டும்.

நேர்காணலில் இந்த பதவிக்கு தேவையான இனம், வயது, தகுதி, அனுபவம் மற்றும் திறன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுகுழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை:

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை நமது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் சான்றிதழ்களின் நகல், மதிப்பெண்கள் சான்றிதழ், வயது, இனம் மற்றும் இதர சான்றிதழ்களை விண்ணப்ப படிவத்துடன் சுய சான்றொப்பமிட்டு சான்றிதழ்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவம் சரியான தகவல்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். குறைபாடு உடைய, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தவறான தகவல்களை அளித்துள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். நேரிலோ அல்லது அலுவலகத்திலோ சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.12.2021
மாலை 5.45 மணி

விண்ணப்பங்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாளுக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

அரசு சார்புச் செயலாளர்,
மாற்றுத்திறனாளிகள் நல (அநமு)த் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.

அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்