You dont have javascript enabled! Please enable it!

2. தமிழ்நாடு அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை தமிழ்நாடு வேலைவாய்ப்புகள் 2021
The Tamil Nadu Fisheries Development Corporation Limited Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இந்திய மீன்வள அளவைதளம், சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள பணி இடங்களை நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு | #EshaTips - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. நெட்மெண்டர்

2. ஃபிட்டர்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. நெட்மெண்டர்

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி (எஸ்.எஸ்.எல்.சி) / மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ii) மீன் பிடி வலைகள் தயாரித்தல் (வலைபின்னுதல்) மற்றும் அறுந்த வலைகளை (சரி செய்தல் பற்றிய அறிவு) பழுது பார்க்க தெரிந்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

2. ஃபிட்டர்

i) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ( எஸ்.எஸ்.எல்.சி) / மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ii) சீட் மெட்டல் ஒர்க் ஃபிட்டர் டிரேடில் தொழில்துறை பயிற்சி நிறுவன (ITI) சான்றிதழ் அல்லது அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1. நெட்மெண்டர்

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்ச வயது வரம்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகள் தளர்வும், பட்டியலினத்தவர்க்கு (SC) 5 ஆண்டுகள் தளர்வும் அனுமதிக்கப்படும்.

2. ஃபிட்டர்

குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்ச வயது வரம்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 3 ஆண்டுகள் தளர்வும், பட்டியலினத்தவர்க்கு (SC) 5 ஆண்டுகள் தளர்வும் அனுமதிக்கப்படும்.





சம்பள விகிதம்:

1. நெட்மெண்டர்

மாத சம்பளவிகிதம் குறைந்தப்பட்சம் ரூ. 18,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 56,900 வரை வழங்கப்படும்.

2. ஃபிட்டர்

மாத சம்பளவிகிதம் குறைந்தப்பட்சம் ரூ. 19,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 63,200 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் (இருப்பின்) அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று டவுண்லோட் செய்து புகைப்படத்துடன் நிரப்பி விண்ணப்பத்துடன்‌ தேவையான உரிய நகல் ஆவணங்களுடன் அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06-11-2021 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மண்டல இயக்குனர், சென்னை மண்டல இந்திய மீன்வள அளவைதளம், மீன்பிடி துறைமுக வளாகம், இராயபுரம், சென்னை-600013.

TNFDC அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பபடிவத்தை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு தகுதிக்கு தமிழ்நாடு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 10 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்