Tamil Nadu Forest Department – TNFD Recruitment 2022
தமிழ்நாடு அரசு வனத்துறை வேலைவாய்ப்புகள் 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் (AIWC) தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு அரசு, வனவிலங்கு ஆராய்ச்சி துறையின் கீழ் இயங்கும் முதன்மையான நிறுவனம் ஆகும். இங்கு கற்பித்தல் மற்றும் பயிற்சி துறையில் கீழ்கண்ட பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | இமெயில் (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. புராஜக்ட் அசிஸ்டண்ட்
மொத்த காலிப்பணியிடங்கள்: 8 பதவிகள்
கல்வித்தகுதி:
அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் 60% மதிப்பெண்களுடன் M.Sc./ M.Tech. in Biotechnology /Molecular Biology / Genetics / Genetic Engineering (அ) M.Se. in Wildlife Biology or Zoology ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 1 வருட ஆராய்ச்சி அனுபவம் விரும்பத்தக்கது.
வயது வரம்பு:
01-06-2022-ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
SC/ ST/ பெண்கள்/ BC/ MBC விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்சம் வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு இருக்கலாம்.
சம்பள விகிதம்:
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த ஊதியமாக HRA சேர்த்து அதிகப்பட்சம் ரூ. 20,000 – ரூ. 25,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து/ நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து அதனை நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடி அல்லது குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இமெயில் அல்லது தபால் மூலமாக அனுப்பும்பொழுது சப்ஜ்க்ட் பிரிவில் என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application for the post of ————————–” என்ன என்பதை தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.07.2022
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி:
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
Additional Principal Chief Conservator of Forests and Directors, AIWC (R, T& E), Vandalur, Chennai – 600048
TNFD அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
TNFD அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application) டவுண்லோட் செய்ய டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!