You dont have javascript enabled! Please enable it!

TNDALU – தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (Teaching) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 19 January 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

The Tamil Nadu Dr.Ambedkar Law University – TNDALU Recruitment 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பின்வரும் பதவிகளின் பணி நியமனத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. பேராசிரியர் – 2 பதவிகள்

2. இணைப் பேராசிரியர் – 4 பதவிகள்

3. உதவி பேராசிரியர் – 68 பதவிகள்

4. உடற்கல்வி உதவி இயக்குநர் – 1 பதவி

மொத்த பதவிகள்: 75 பதவிகள்

கல்வித்தகுதி:

யுஜிசி விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் 55% மதிப்பெண்களுடன் [SC/ST/மாற்றுத் திறனாளிகள் (உடல் மற்றும் பார்வைக் குறைபாடுள்ளவர்கள்) 50% மதிப்பெண்கள் போதுமானது] தொடர்புடைய பாடப் பிரிவுகளில் மாஸ்டர் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துரையில் Ph.D தகுதி விரும்பபடுகிறது. மேலும் LLM தகுதியும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

26-12-2021 ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

அரசின் விதிமுறை மற்றும் வழிமுறை பின்பற்றப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

SC / ST / PWD வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ. 590 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

பொது / OBC & EWS வகுப்பை சேர்ந்தவர்கள் ரூ.1,180/- (ஆயிரத்து நூற்றி எண்பது மட்டும்) விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணத்தை The Registrar, The Tamil Nadu Dr.Ambedkar Law University, Chennai என்னும் பெயரில் சென்னையில் செல்லுபடியாகும் வகையில் டிமாண்ட் டிராப்ட் (DD) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்து இரண்டு செட்களில் விண்ணப்பப் படிவத்தை முறையாக நிரப்பவும். தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய சான்றொப்பத்துடன் (Self Attested) இணைத்து ஒரு நகல் (hard copy) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (Soft copy) குறுவட்டு (CD) அல்லது பென் டிரைவில் சேவ் செய்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப உறையின் மேற்புறத்தில் அவர்கள் சட்டம்/இன்டர்டிசிப்ளினரி படிப்புகள் உட்பட எந்த பதவிக்கான பதவியை விண்ணப்பிக்கின்றனர் என தெளிவாக எழுத வேண்டும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 19-01-2022 மாலை 5:45 க்குள்

TNDALU அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

TNDALU அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Career webpage)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தல்கள் (Instructions to the Candidates) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்ப வடிவம் – பேராசிரியர்/ இணைப் பேராசிரியர் (Application Format – Professor/Associate Professor) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்ப வடிவம் – உதவி. பேராசிரியர் (Application Format – Asst. Professor) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்ப வடிவம் – உடற்கல்வி உதவி இயக்குநர் (Application Format- ADPE) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

To
The Registrar, the Tamil Nadu Dr.Ambedkar Law University, “Poompozhil”, No.5, D.G.S.Dinakaran Salai, Chennai – 600 028



தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்