தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவண்ணாமலை மாவட்டம் வேலைவாய்ப்புகள் 2022
Tamil Nadu Civil Supplies Corporation – TNCSC Tiruvannamalai Dist Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருவண்ணாமலை மாவட்டத்தில் காரிப் பருவம் 2022-2023ல் ஏற்பட்டுள்ள காலிபணியிடங்களில் நெல் கொள்முதல் பணிக்காக கீழ்காணும் இன சுழற்சி விபரப்படி பருவகால விதிகளின்படி தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடங்கள் நெல் கொள்முதல் பருவத்திற்கு மட்டும் பொருந்தும். மேலும் இப்பருவக்கால பணி முற்றிலும் தற்காலிகமானது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. பருவகால பட்டியல் எழுத்தர்கள் (ஆண் & பெண்)
2. பருவகால உதவுபவர்கள் (ஆண் & பெண்)
3. பருவகால காவலர்கள் (ஆண் மட்டும்)
மொத்த பணியிடங்கள்: பல்வேறு பதவிகள்
கல்வித் தகுதி:
1. பருவகால பட்டியல் எழுத்தர்கள்
அறிவியல் பிரிவில் (B.Sc) பிரதான பாடம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
இளங்கலை அறிவியல்/ வேளாண்மை மற்றும் பொறியியல்
2. பருவகால உதவுபவர்கள்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. பருவகால காவலர்கள்
8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தவறியவர்கள்
வயது வரம்பு:
01.07.2022 ஆம் தேதியின் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 32 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 37 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. பருவகால பட்டியல் எழுத்தர்கள்
தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ.5,285 + ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100/- வழங்கப்படும்
2. பருவகால உதவுபவர்கள்
தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ.5218 + ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100/- வழங்கப்படும்
3. பருவகால காவலர்கள்
தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ.5218 + ரூ.3,499/- (அகவிலைப்படி) மற்றும் பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 100/- வழங்கப்படும்
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் தகுதியுடைய திருவண்ணாமலை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட தகுதி உடைய (ஆண்கள் மட்டும்) விண்ணப்பதாரர்கள் உரிய (1) கல்விச்சான்று, (2) சாதிச்சான்று, (3) வேலை வாய்ப்பு அலுவலக பதிவிற்கான சான்று, (4) மின்னனு குடும்ப அட்டை, (Smart card) (5) இருப்பிடச்சான்று (6) வயது உறுதிச்சான்று மற்றும் (7) ஆதார் அட்டை முன்னாள் இராணுவ வீரராக இருப்பின் அதற்கான சான்று ஆகியவற்றுடன் 2 Passport Size புகைப்படத்துடன் விண்ணப்பங்கள் உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் மேலும் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களின் நகல்களின் ஒவ்வொரு பக்கமும் தாங்கள் சான்றொப்பமிடவேண்டும். மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், திருவண்ணாமலை மண்டலம் நெ.567, சிட்கோ காம்ப்ளக்ஸ், வேங்கிக்கால், திருவண்ணாமலை-606 604. என்ற முகவரியில் பதிவுத்தபாலில் (ஒப்புகையுடன்) அஞ்சல் வழியில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
மேலே தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் ஆய்வின் அடிப்படையில் (Certificate Verification) தேர்ச்சி பெறுபவர்கள் நிர்ணயிக்கப்படும் மற்றொரு தேதியில் நேர்காணாலுக்கு அறிவிப்பாணை மூலம் அழைக்கப்படுவார்கள். தேர்வில் தேர்வு செய்யப்படுபவர்களுக்குரிய பணி ஆணை பின்பு தபால் மூலம் அனுப்பப்படும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பங்கள் 25.07.2022 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்