You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 28 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் வேலைவாய்ப்புகள் அறிவிக்கை 2021

Tamil Nadu Government Revenue Department Recruitment Notification 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை 2020-2021 மற்றும் 2021-2022-ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை இனச்சுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

TN GOVT Village Assistant Recruitment 2021 - Tamilancareer.com

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/நேரடி





பணியிட விபரங்கள்:

1. கிராம உதவியாளர்

மொத்த பணியிடங்கள்: 7 பதவிகள்

கல்வித்தகுதி (01.07.2021 அன்று உள்ளபடி):

விண்ணப்பதாரர்கள் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள கல்வித்தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச கல்வித்தகுதி: 5-ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு (01.07.2021 அன்று):

i) ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் குறைந்தபட்ச வயது 21 வயது (முடிவடைந்து இருக்க வேண்டும்). அதிகபட்ச வயது 35 வயது (முடிவடைந்து இருக்கக் கூடாது).

ii) ஏனையோர் (ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) ஆகிய வகுப்பினை சாராதவர்கள்) குறைந்தபட்ச வயது 21 வயது (முடிவடைந்து இருக்க வேண்டும்). அதிகபட்ச வயது 30 வயது (முடிவடைந்து இருக்கக் கூடாது).

iii) மாற்றுத்திறனாளிகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் 10 ஆண்டு வரை வயது வரம்புச் சலுகை பெற தகுதியுடையவராவார்கள்.





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 11,100 முதல் அதிகப்பட்சம் ரூ. 35,100 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவுமில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

கிராம உதவியாளர் பதவிக்கு நியமன இட ஒதுக்கீட்டு விதி வட்ட வாரியாகப் பின்பற்றப்படும்.

வட்டவாரியான காலிப்பணியிட பகிர்வு நடைமுறையில் உள்ள விதிகளின்படி பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். தெரிவு நடைபெறுவதற்கு முன்பு வரை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்கு
உட்பட்டதாகும்.

பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு தகுதிவாய்ந்த பெண் விண்ணப்பதாரர்கள்

கிடைக்கப்பெறாவிடில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட காலிப்பணியிடங்கள் அதே வகுப்பைச் சார்ந்த ஆண் விண்ணப்பதாரர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கான நியமன இட ஒதுக்கீடு விதி இத்தெரிவிற்கும் பொருந்தும்.

மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திறன் சதவீதம் 40% முதல் 50%-க்குள் உடையவராக இருக்க வேண்டும். பார்வையற்ற மற்றும் காதுகேளாத நபர்கள் இத்தெரிவிற்கு தகுதியற்றவர்களாவர்.

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை / ஆதார் அட்டை / குடும்ப அட்டை / ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். மனுதாரரின் நிரந்தர முகவரி தொடர்பாக எழும் தெளிவின்மைகள் குறித்து பணி நியமன அலுவலரின் முடிவே இறுதியானது.

இட ஒதுக்கீட்டு வகை, வயது மற்றும் கல்வித்தகுதி மற்றும் இதர அடிப்படைத் தகுதிகள் ஆகியவை குறித்த விண்ணப்பதாரரின் விபரங்கள் தவறு எனத் தெரியவந்தால் அத்தகைய விண்ணப்பம் நிராகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்விற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) பின்னர் தனியே நேரில் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கும் தங்களது சொந்த செலவில் வர வேண்டும். தேர்வு மையங்களை மாற்றக் கோரும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட
ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தெரிவு செய்யப்படும்.




விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு தபால் மூலமாகவோ, நேரிலோ அனுப்பலாம். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு புகைப்படத்தின் மேல் பகுதியில் சுய சான்றொப்பத்துடன் விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

அனைத்து சான்றாவணங்களின் நகல்கள் மட்டுமே உரிய முறையில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கக் கூடாது.

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் கீழ்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்பட வேண்டும்.

குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்குள் இவ்வலுவலகத்திற்கு வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது “கிராம உதவியாளர் பணிக்கான நேரடித் தேர்வு – ஜூலை 2021” என தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள்: 28.10.2021 அன்று மாலை 05.45 மணிக்குள்

விண்ணப்பங்கள் அனுப்ப / சமர்ப்பிக்க வேண்டிய முகவரி:

வருவாய்த்துறை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஆண்டிபட்டி வட்டம், தேனி மாவட்டம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்