You dont have javascript enabled! Please enable it!

NTEP – தமிழ்நாடு அரசு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட சுகாதார சங்கம்‌ (RNTCP) தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டம்‌ (NTEP) வேலைவாய்ப்புகள் 2021.
District Health Association and The National Tuberculosis Elimination Program Recruitment Notification 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரச்சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தில் கீழ்கண்ட காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான ஊதியத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் சுகாதார சங்கம்‌ (RNTCP) தேசிய காசநோய்‌ ஒழிப்புத்‌ திட்டம்‌ (NTEP) வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 30 September 2021 – FreeJobsPortal.in

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. மருத்துவ அலுவலர் (TB Cell Medical Officer)

2. நுண்ணுயிரியலாளர் (Microbiologist – Culture & DST Lab)

3. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV)

5. முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technicians )

6. ஆய்வக நுட்புனர் (LT)

7. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS)

8. கணக்காளர் (Accountant)

9. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

மொத்தம் பணியிடங்கள்: 31 பதவிகள்

கல்வித் தகுதி:

1. மருத்துவ அலுவலர் (TB Cell Medical Officer)

i) மருத்துவ படிப்பு (MBBS) (அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு) அங்கீகரிக்கப்பட்ட
மருத்துவ கவுன்சில் படிப்பு முடித்தல் (CRRI) பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

2. நுண்ணுயிரியலாளர் (Microbiologist – Culture & DST Lab)

i) எம்.டி நுண்ணுயிரியல் அல்லது பிஹெச்டி மருத்துவம் அல்லது எம்எஸ்சி மருத்துவம் அல்லது செயல்முறை சார்ந்த நுண்ணுயிரியல்

ii) M.D. Microbiology or

iii) Ph.D. Medical Microbiology or MSc.(Medical or Applied microbiology)

3. முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (STS)

i) ஏதேனும் இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட (Sanitary Inspector Course) பல்நோக்கு சுகாதார பணியாளர் அனுபவம், காசநோய் சுகாதார பார்வையாள் அனுபவ சான்றிதழ்.

ii) கனிணி பயன்பாட்டு சான்றிதழ்

iii) இரு சக்கர ஓட்டுநர் உரிமம்

4. காசநோய் சுகாதார பார்வையாளர் (TB-HV)

i) இளங்கலை பட்டப்படிப்பு (அல்லது) (10+2) தேர்ச்சி பல்நோக்கு சுகாதார பணியாளர் மகளிர் சுகாதார மேற்பார்வையாளர் / துணை சுகாதார செவிலியர் பயிற்சி – சுகாதார உயர்கல்வியில் மேற்படிப்பு

ii) காசநோய் சுகாதார மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றவர்

iii) கனிணி பயிற்சி சான்றிதழ்

5. முதுநிலை ஆய்வக நுட்புனர் (Senior Lab Technicians)

i) B.Sc / Biotechnology / Microbiology

ii) இளங்கலை பட்டப்படிப்பு

iii) (10+2) மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர் பட்டம் அல்லது பட்டயம்

iv) கனிணி பயிற்சி சான்றிதழ்

6. ஆய்வக நுட்புனர் (LT)

i) (10+2) மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயிற்சி
பெற்ற ஆய்வக நுட்புனர் பட்டம் அல்லது பட்டயம்

ii) கனிணி பயிற்சி சான்றிதழ்

7. முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS)

i) அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பு

ii) (10+2) மற்றும் மருத்துவ கல்வி இயக்குநரால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற ஆய்வக நுட்புனர் பட்டம் அல்லது பட்டயம்

iii) கனிணி பயிற்சி சான்றிதழ்

8. கணக்காளர் (Accountant)

i) இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பு

ii) இரண்டு ஆண்டு அனுபவம் (Double Entry System in any Institutions)

iii) இரண்டு ஆண்டு அனுபவம் (Accounting Software)

9. தரவு உள்ளீடு இயக்குவர் (Data Entry Operator)

i) (10+2) மற்றும் கணிப்பொறிப் பயன்பாடு பட்டயம் (DCA) அல்லது அதற்கு இணையான DOEACC அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பட்டம் அல்லது பட்டயம்

ii) தட்டச்சு வேகம் 40WPM தமிழ் மற்றும் ஆங்கிலம்

iii) MS office மற்றும் எளிய புள்ளியல் package

வயது வரம்பு:

அதிகப்பட்சம் வயது வரம்பு 62-க்குள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி தொகுப்பூதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுநருக்கான நிரந்தர உரிமம், சொந்த வாகனம் வைத்திருக்க வேண்டும். (வ.எண் : 3 மற்றும் 7 பதவிக்கு மட்டும்)

சான்றொப்பமிட்ட நகல்கள் (Attested xerox Copy), இணைத்து விண்ணப்பிக்கவும், ரூ. 5/- க்கான தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட 4″ x 10” கவர் மற்றும் கையொப்பமிட்ட விண்ணப்ப கடிதத்துடன் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப உறையின் மேல் பதவியின் பெயரை குறிப்பிட வேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் DHS – NTEP -யின் அதிகாரத்திற்குட்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பைரத்து செய்யவோ அல்லது ஒத்தி வைக்கவோ மாவட்ட நலக்குழுவிற்கு அதிகாரமுள்ளது என்பதை அறியவும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 20.11.2021 மாலை 05.00க்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர், மருத்துவப்பணிகள் (காசம்), மாவட்ட காசநோய் மையம்,
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகம், புத்தூர், திருச்சிராப்பள்ளி-620 017.

 மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Notification) டவுண்லோட் செய்ய:  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய:  இங்கே கிளிக் செய்யுங்கள்



இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்