தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை வேலைவாய்ப்புகள் 2021
Tamil Nadu Medical Recruitment Board, Chennai TN MRB Recruitment Notification 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. உதவி மருத்துவ அலுவலர் ஆயுர்வேதம் (Assistant Medical Officer Ayurveda) – 5 பதவிகள்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
அரசு அங்கீகரித்த கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ்நாடு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஏதேனும் ஒன்றில் HPIM (Ayurveda) அல்லது GCIM (Ayurveda) அல்லது L.I.M. (Ayurveda) அல்லது B.A.M.S. இல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
இந்திய மருத்துவ வாரியம், சென்னை மையத்தில் ‘A’ வகுப்பு அல்லது ‘A’ சிறப்பு வகுப்பின் கீழ் பதிவு செய்ய தகுதியுடைய ஆயுர்வேதாவில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
மற்றும்
தனது பெயரை இந்திய மருத்துவ மத்திய வாரியம் / தமிழ்நாடு இந்திய மருத்துவ வாரியம் சென்னையில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01-07-2020-ன் படி SC க்கள், SC (A) க்கள், ST க்கள், MBC & DCs, BC க்கள், BCM க்கள் (முன்னாள் ராணுவத்தினர் உட்பட) அதிகப்பட்சம் 58 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
மற்றவர்கள் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம். மற்ற பிரிவில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் அதிகப்பட்சம் 48 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக நிலை-22 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 56,100 முதல் அதிகப்பட்சம் ரூ. 1,77,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க SC/ SCA/ ST/ DAP (PH) விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- செலுத்த வேண்டும்.
மற்ற அனைவரும் ரூ. 1000/- செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி அடிப்படையிலான தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சி விதிகளை முறையாகப் பின்பற்றி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கணினி அடிப்படையிலான தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு SC/ SCA/ ST பிரிவினர் 30 மதிப்பெண்களும், மற்றவர்கள் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும்.
வினாத்தாள் தமிழில் மட்டுமே அமைக்கப்பட்டு 200 ஆப்ஜக்டிவ் கேள்விகளை கொண்டிருக்கும். தவறான விடைக்கு எதிர்மறை மதிப்பெண் இருக்காது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-11-2021
TN MRB – யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!