தமிழகத்தில் மரைன் ஊர்க்காவல் படை வேலைவாய்ப்புகள் 2021
Tamilnadu Marine Home Guard Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 42 மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் பணி
யாற்ற 1000 மரைன் ஊர்க் காவல் படை இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தி, பாதுகாப்பு பணியில் போலீசாருக்கு உதவ உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் களில் ஊர்க்காவல் படை என்ற அமைப்பு செயல்படுவது போல் கடலோர
கண்காணிப்பு பணிக்காக ‘மரைன் ஹோம்கார்டு’ பணிக்கு 1000 இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவர் என சட்டசபை கூட்டத் தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சை, நாகை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 42 மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் இதற்காக இளைஞர்கள் தேர்வு
செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கடற்கரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு
படித்த மீனவ இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராகவும், வழக்கு எதுவும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். ஒரு ஸ்டேஷனுக்கு 25 பேருக்கும் மேல் நியமிக்கப்பட உள்ளனர்.
ஏற்கனவே உள்ள ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்படுவது போல் சம்பளம் வழங்கப்படும்.
தகுதியான மீனவ இளைஞர்கள் கடல் மீன் பிடிதொழிலுக்கு சென்றாலும், இந்த பணியில் விரும்பினால் சேரலாம்.
தற்போது இப்படைக்கான தேர்வு பணி நடப்பதால் இதற்கு மீனவர் சமுதாய இளைஞர்கள் அவர்கள் பகுதியில் உள்ள மரைன் போலீஸ் ஸ்டேஷன்களில் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!