You dont have javascript enabled! Please enable it!

பிளஸ் டூ க்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்?

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..




பள்ளிப் பருவத்தின் இறுதி வகுப்பான 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டது. அடுத்தது என்ன? இந்தக் கேள்வி அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் பல எண்ணங்களும் கேள்விகளும் எழும்.




பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துவிட்டது. அடுத்து என்ன படிக்கலாம், எந்தக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்கள் யோசிக்கும் வேளையில், பிள்ளைகளை எந்தப் படிப்பில் சேர்ப்பது என்ற தேடுதலை பெற்றோர்களும் ஆரம்பித்திருப்பார்கள். இவர்களுக்கு உதவும் வகையில், என்னென்ன கல்லூரிப் படிப்புகள் உள்ளன என்பது குறித்த கட்டுரை.




இளநிலை பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், முதலில் எந்தத் துறையில் சேர்ந்து படிக்க வேண்டும், தொழில் படிப்பா அல்லது தொழில்சாரா படிப்பா, சேர விரும்பும் படிப்பின் எதிர்காலம் என்ன, என்னென்ன மாதிரியான வாய்ப்புகள் உள்ளன என்பனவற்றை எல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம்.




அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எவ்வளவு செலவாகும்… போன்ற கேள்விகள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே இருக்கும். ஒரு மாணவனுக்கு ப்ளஸ் டூ மதிப்பெண் தேர்வு முடிவுகள் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது ப்ளஸ் டூ வகுப்புக்குப் பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதுகுறித்து எடுக்கும் முடிவு. இந்த முடிவை, தெளிவாக எடுக்க வேண்டும்.




ப்ளஸ் 2 க்கு பிறகு என்ன படிப்பை தேர்வு செய்ய வேண்டும்? என்ற முடிவே ஒரு மாணவனின் முழு வாழ்க்கையையும் நிர்ணயிக்கும். விரும்பிய பாடப்பிரிவைத் தேர்வு செய்து, படித்து, பின் விரும்பிய வேலையைப் பெற்று அல்லது விரும்பிய தொழிலை மேற்கொள்வது என்பது ஒருவனுக்கு முழுவதும் மனநிறைவையும், மகிழ்வையும் தருகின்ற ஒன்றாகும். இதற்கு நாடு முழுமையும் உள்ள படிப்புகளையும், அவற்றிற்கான வாய்ப்புகளையும் முழுவதுமாக அறிந்துகொள்வது அவசியமாகும். இதற்கு தேடல் மிகக் கட்டாயம்.




பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களின் கட்டாயம், நண்பர்களின் உந்துதல், தெரிந்தவர்கள் பணியாற்றும் துறை, தனியார் கல்லூரிகளில் கவர்ச்சிகரமான விளம்பரம் போன்றவற்றின் அடிப்படையிலேயே படிப்பையும் கல்லூரியையும் தேர்வுசெய்கின்றனர். இதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பிட்டப் பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பது உங்களுடைய விருப்பத்தையும், நோக்கத்தையும், எதிர்காலத் திட்டங்களையும், குடும்பச் சூழல்களையும் பொறுத்ததே ஆகும். மாறாக, நண்பர்களையோ அல்லது உறவினர்களையோ பொறுத்தது அல்ல என்பதை முதலில் மனதில்கொள்ள வேண்டும்.



பொதுவாக அறிவியல் பிரிவு எடுப்பவர்களுக்கு வாய்ப்பு குறைவு எனச் சொல்லப்படுவது உண்டு. ஆனால், அவர்களுக்குத்தான் வாய்ப்புகளும் படிப்புகளும் ஏராளம் உள்ளன. நீட் தேர்வு எழுதாமலேயே மருத்துவத் துறையில் அதிகமான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவை அனைத்திலும், அறிவியல் பிரிவில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில், சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேரலாம்.



இளநிலை கலைப் படிப்புகளாக, பொருளாதாரம், வணிகம், வணிகவியல் போன்ற படிப்புகளை அரசுக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம். தற்போது ஏராளமான அரசு உறுப்புக் கல்லூரிகள் திறந்திருப்பதால் அதில் சேர்ந்து படிக்கலாம். கட்டணமும் குறைவு. அரசுப் பணித் தேர்வுகள் எழுத ஆர்வமுள்ளவர்கள், இளநிலைப் பட்டப்படிப்பில் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வுசெய்ய வேண்டும்.




12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஏதேனும் ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும், பின் பார்த்துக்கொள்ளலாம் என்ற நிலை மாறி, அனைத்து உயர்படிப்பிற்கான இடங்களுக்கும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி கட்டாயம் என்ற நிலை உருவாகிவிட்டதை மறந்துவிடாதீர்கள். இவற்றைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் அவசியமாகும். மாணவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன! சரியான படிப்பையும் வழிகாட்டுதலையும் பெறவேண்டியது மட்டுமே அவசியம்.




ப்ளஸ் டூ-க்குப் பிறகு என்ன படிப்பு படிக்கலாம்?

எங்கு படிக்க வேண்டும்?

எந்த படிப்புக்கு என்ன செலவாகும்?

எந்த படிப்பை படித்தால் வேலை கிடைக்கும்?

நுழைவுத்தேர்வு எழுதி சேர வே‌ண்டிய படிப்புகள் எவை?

போன்ற அனைத்து தகவல்களும் உள்ளடக்கிய தமிழக அரசால் வெளியிடப்பட்ட முழுமையான வழிகாட்டி தகவல்கள் கொண்ட புத்தகத்தை [PDF] டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




வாட்சப் குழுவில் இணைய…


இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்