புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் வேலைவாய்ப்புகள் 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்பது எம்.ஜி.ஆரால் பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்க தொடங்கப்பட்ட திட்டமாகும். இத்திட்டம் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது தமிழ்நாட்டில் முழுமையாக செயற்படுத்தப்பட்டது. அதன்பின்பு அரசுகள் மாறினாலும் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் என்ற பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன. இந்த திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய (திட்டத் தேவைகள் & திருப்திகரமான செயல்திறனைப் பொறுத்து நீட்டிக்கப்படலாம்) நியமனம் தொடர்பாக கீழ்கண்ட தகுதிகள் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. கணினி உதவியாளர்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
i) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ii) கணினியில் M.S.Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
iii) இளநிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
வயது வரம்பு அரசு விதிகளின்படி கடைபிடிக்கப்படும். மேலும் வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
சம்பள விகிதம்:
ஒப்பந்த நியமன அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு ஒருங்கிணைந்த மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 12,000/- வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும். பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்.
இந்நேரடி நியமன நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் இறுதி முடிவுக்கு உட்பட்டவையாகும். இந்நியமனம் தொடர்பாக விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் எவ்வித மேல்முறையீடுகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பெயர்/ தாய், தந்தை பெயர்/ தேசிய இனம்/ வகுப்பு/ பிறந்த தேதி/ இருப்பிட முழு முகவரி, தொலைபேசி எண்/ கைபேசி எண்/ கல்வித் தகுதி/ தொழில்நுட்ப/ கணினி தகுதி/ முன் அனுபவம் ஆகியவற்றினை முழு வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து கையொப்பமிட்டு விண்ணப்ப படிவத்துடன் கல்லூரி மாற்று சான்று, பட்டம் பெற்றதற்கான மதிப்பெண் சான்று, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கீழ்நிலை தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன் அனுபவ சான்று, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றின் நகல்கள் Gazetted Officer-ன் மேலொப்பம் பெற்று விண்ணப்பத்தினை கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன. தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.11.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியர், சத்துணவுத் திட்டப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை.
அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!