சமூக பாதுகாப்புத் துறை தஞ்சாவூர் மாவட்டம் வேலைவாய்ப்புகள் 2021
Department of Social Defence Thanjavur District Recruitment 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சமூகப்பாதுகாப்புத்துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம்-2015 மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதியுடைய சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
2015-ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் நல குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர்.
குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித நல மருத்துவம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சுகாதாரம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநலம் மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர். ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. ஒரு நபர் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்தால் அவர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினருக்கு நியமிக்க தகுதியற்றவர் ஆவார்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை நமது இணையதளத்திலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தை பூர்த்தி செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தகுந்த சான்றிதழ்களின் (இரண்டு செட்) நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கீழ்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேருமாறு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.11.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
அரசினர் குழந்தைகள் இல்ல வளாகம்,
வ.உ.சி நகர், தஞ்சாவூர் – 613 007
உதவிக்கு அழைக்க:
தொலைபேசி எண்: 04362 237014
தஞ்சாவூர் மாவட்டம் அரசு இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தினை (Official Application) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!