தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்புகள் 2022
The Tamil Nadu Fisheries Development Corporation Limited – TNFD Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சென்னை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. மீன்வள உதவியாளர்
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
i) எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) தமிழில் எழுத படிக்க மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
iii) மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
i) ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்கள்) மற்றும் பழங்குடி வகுப்பினர் குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 37 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
ii) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) 18 வயது முதல் அதிகப்பட்சம் 34 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
iii) இதர வகுப்பினர் (மேற்கண்ட வகுப்பை சாராதவர்கள்) 18 வயது முதல் அதிகப்பட்சம் 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
iv) சிறப்பு சலுகை உள்ளவர்கள் முன்னாள் இராணுவத்தினர், விதவைகள், போரில் கணவனை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் (எல்லா வகுப்பினர்களும் தகுதியுடையவர்கள்) நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி சலுகை அளிக்கப்படும்.
சம்பள விகிதம்:
மாத சம்பளவிகிதம் குறைந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 58,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். வகுப்பு மற்றும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகித தரவரிசைப்படி தேர்வு செய்யப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்படி பணியிடத்திற்கு தேவையான கல்வி தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை புகைப்படத்துடன் நிரப்பி விண்ணப்பத்துடன் தேவையான உரிய நகல் ஆவணங்களுடன் அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்பலாம். ஒன்றுக்குமேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10-01-2022 மாலை 5 மணிக்குள்
விண்ணப்பம் பெற/அனுப்ப வேண்டிய முகவரி:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, இணைஇயக்குநர் (மண்டலம்), சென்னை அலுவலகம், D.M.S. வளாகம் மூன்றாம் தளம் தேனாம்பேட்டை, சென்னை -600 006,
உதவிக்கு அழைக்க:
தொலைபேசி எண். 044-24328596
TNFDC அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்