You dont have javascript enabled! Please enable it!

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

District Health Society Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மாவட்ட நலச்சங்கம் (District Health Society) ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்க்கண்ட திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 20.10.2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை | உதவியாளர் - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/நேரடி





பணியிட விபரங்கள்:

1. பிசியோதெரபிஸ்ட்

2. பாரா மெடிக்கல் கண் உதவியாளர்

3. தரவு செயலாக்க உதவியாளர்

4. ஐடி ஒருங்கிணைப்பாளர்

5. ஆய்வக அட்டெண்டர்

6. தரவு நுழைவு ஆபரேட்டர்

7. ஓட்டுனர்

8. மாவட்ட தர ஆலோசகர்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. பிசியோதெரபிஸ்ட்

Bachelor of Physiotherapist (BPT) from any Recognized University

2. பாரா மெடிக்கல் கண் உதவியாளர்

B.Sc. (Optometry) from any Ophthalmic Recognized University

3. தரவு செயலாக்க உதவியாளர்

i) Master of Computer Application Assistant

ii) B.Sc. Computer Science

iii) Bachelor of Computer Application

iv) Any Degree with Computer Application

4. ஐடி ஒருங்கிணைப்பாளர்

MCA / BE / B.Tech with 1-year Experience in the relevant field

5. ஆய்வக அட்டெண்டர்

8th Pass

6. தரவு நுழைவு ஆபரேட்டர்

B.Sc Computer Science / Bachelor of Operator Computer Application / Any Degree with Computer Application (Tamil / English Typing)

7. ஓட்டுனர்

10th Pass / LMV Batch

8. மாவட்ட தர ஆலோசகர்

Dental / AYUSH / Nursing / Social Science / Life Science Graduates with Master Degree in Hospital Administration / Public Health / Health Management (Full Time or Equivalent) with 2 years Experience in Health Administration.

Desirable Training / Experience on NABH / ISO9001-2008 / Six Sigma / Lean / Kaizen Would be preferred. Previous work experience in the field of Health quality would be an added advantage.

வயது வரம்பு:

1. பிசியோதெரபிஸ்ட்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2. பாரா மெடிக்கல் கண் உதவியாளர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. தரவு செயலாக்க உதவியாளர்

20 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

4. ஐடி ஒருங்கிணைப்பாளர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

5. ஆய்வக அட்டெண்டர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

6. தரவு நுழைவு ஆபரேட்டர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

7. ஓட்டுனர்

35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

8. மாவட்ட தர ஆலோசகர்

45 வயதிற்குள் இருக்க வேண்டும்.





சம்பள விகிதம்:

1. பிசியோதெரபிஸ்ட்

மாத ஊதியம் ரூ. 10,000

2. பாரா மெடிக்கல் கண் உதவியாளர்

மாத ஊதியம் ரூ. 10,500

3. தரவு செயலாக்க உதவியாளர்

மாத ஊதியம் ரூ. 15,000

4. ஐடி ஒருங்கிணைப்பாளர்

மாத ஊதியம் ரூ. 16,500

5. ஆய்வக அட்டெண்டர்

மாத ஊதியம் ரூ. 5500

6. தரவு நுழைவு ஆபரேட்டர்

மாத ஊதியம் ரூ. 10,000

7. ஓட்டுனர்

மாத ஊதியம் ரூ. 9,000

8. மாவட்ட தர ஆலோசகர்

மாத ஊதியம் ரூ. 40,000

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப
படிவங்களை ஈரோடு மாவட்ட அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேரில் பெற்று கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் புகைப்படத்துடன் கூடிய தங்கள் பயோடேட்டா (CV), தங்களது கல்வி தகுதியின் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ /விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன. தபால் உறையின் மேல் பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும். குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

ஈரோடு மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நிபந்தனைகள்:

1) இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2) எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது.

3) பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-10-2021 மாலை 5 மணி

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு-638012.

உதவிக்கு அழைக்கவும்:

தொலைபேசி எண்: 0424-2431020.

ஈரோடு மாவட்டம் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்