You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: 30 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை வேலைவாய்ப்புகள் 2021
Department of Economics and Statistics (TN DES) Recruitment 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

அறிவிக்கை எண். 1/2021

பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழகஅரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை (பள்ளி/கல்லூரியினால் வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்).

அதிகபட்ச வயது வரம்பு 01.03.2021அன்றுள்ளவாறு):

01.03.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பல்வேறு பிரிவுகளின் அதிகப்பட்ச வயது வரம்பு தகவல் கீழ் குறிப்பிட்டுள்ளபடி கடைபிடிக்கப்படும்.

1. B.C (Muslim) – 32 வயது

2. S.C -35 வயது

3. M.B.C & D.C – 32 வயது

4. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில், ஆதரவற்ற விதவைகள் – 35 வயது

5. மேற்குறிப்பிட்டுள்ள வகுப்பினரில் மாற்றுத் திறனாளிகள்களுக்கு – வயது உச்ச வரம்புடன் கூடுதலாக 10 ஆண்டுகள்.

6. மேற்குறிப்பிடப்பட்டுள்ள வகுப்பினரில் முன்னாள் ராணுவத்தினர்களுக்கு – 53 வயது





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக ஊதிய நிலை 1 -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

தேர்வுக்கான தகுதி விவரம்:

1. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை (பள்ளி/கல்லூரியினால் வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்).

2. வயது: மேற்குறிப்பிட்டுள்ளவாறு (வயது குறிப்பிட்ட அரசு சார்ந்த அமைப்பு வழங்கிய அடையாளச்சான்று/பள்ளி மாற்றுச்சான்றிதழ்).

3 சாதிச்சான்றிதழ்: வருவாய்த்துறையினரால் வழங்கப்பட்ட சான்றிதழ்.

4. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் வகுப்பைச் சார்ந்தோருக்கான காலிப்பணியிடத்திற்கு முன்னுரிமை பெற்றவருக்கு (முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள்) முன்னுரிமை வழங்கப்படும்.

5. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்பைடச சார்ந்தோருக்கான காலிப்பணியிடத்திற்கு தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் சுய விபரங்களுடன்‌ கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌ தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும்‌ வகையில்‌ பதிவு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 30.10.2021 மாலை 5 மணிக்குள்

இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள்  அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை, எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006.

 DESஅதிகாரப்பூர்வ இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பபடிவம் ஆங்கிலம் (English Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பபடிவம் தமிழ் (Tamil Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பை (Official Updated Notice) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்