You dont have javascript enabled! Please enable it!

3. தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசிநாள் 10 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் வேலைவாய்ப்புகள் 2021

Central University of Tamil Nadu (CUTN) Tiruvarur Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள  மத்தியப் பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணியிடங்கள்

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை இமெயில்





பணியிட விபரங்கள்:

1. ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் கள ஆய்வாளர்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில்  கள ஆராய்ச்சி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விரும்பத்தக்கது:

வர்த்தகத்தில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனினும் பிற துறைகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க எந்த தடையும் இல்லை, ஆனால் தேர்வுகுழுவின் முடிவு  இறுதியானது. விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தை மொழிபெயர்ப்பதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (05-10-2021-ன் படி):

அதிகப்பட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 13,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பத்தினை இமெயில் வழியாக அனுப்பும்போது என்ன பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை சப்ஜக்ட் என்னுமிடத்தில் ‘Application for Research Assistant cum Field Investigator’ என தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 10-10-2021

CUTN அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி: elmurugan@cutn.ac.in




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்