அரசு ரப்பர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021
Arasu Rubber Corporation Limited Recruitment Notification 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
அரசு ரப்பர் கார்ப்பரேஷன் என்பது தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் கீழ் இயங்கும் நிறுவனமாகும். இந்நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. இளநிலை வரைவு அலுவலர் (Junior Draughting Officer)
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
i) ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தின் பொறியியல் (சிவில் அல்லது மெக்கானிக்கல்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
ii) பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்லது கல்லூரியின் பொறியியல் (சிவில் அல்லது மெக்கானிக்கல்) டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
அல்லது
iii) AMIE இன் A & B பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் ஒரு வருடத்திற்கு குறையாத பொதுவாக நடைமுறை அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
OC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BC & MBC விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 20,600 முதல் அதிகப்பட்சம் ரூ. 65,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில்/எஸ்.எம்.எஸ் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு தபால் மூலம் விண்ணப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தினை அனுப்பும்போது தபால் உறையின் மேல் “Application for the post of Junior Draughting Officer” என தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 20-11-2021 மாலை 5 மணி
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Managing Director, Arasu Rubber Corporation Limited, Regd.Office: Post Box No.75, Vadasery, Nagercoil-629001, Kanyakumari District, TamilNadu.
உதவிக்கு அழைக்க:
04652 274203, 294441
உதவிக்கு இமெயில்: arasurubber.arcl@tn.gov.in
ARCL அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notiication) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!