வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்சுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கீழ்க்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
பணியிட விபரங்கள்:
1. உதவியாளர் / நிதியாளர்
2. இளநிலை உதவியாளர் / தட்டச்சர்
3. அலுவலக உதவியாளர்
4. காவலர்
5. துப்புரவாளர்
6. பெருக்குபவர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
1. உதவியாளர் / நிதியாளர்
பி.காம், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
2. இளநிலை உதவியாளர் / தட்டச்சர்
10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு தேர்ச்சி அல்லது தமிழ் தட்டச்சு சீனியர் கிரேடு மற்றும் ஆங்கிலம் தட்டச்சு ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. அலுவலக உதவியாளர்
8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் நிர்ணயித்த படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. காவலர்
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. துப்புரவாளர்
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. பெருக்குபவர்
தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகப்பட்ச வயது வரம்பு குறித்து தகவல் குறிப்பிடப்படவில்லை. அரசின் விதிமுறை பின்பற்றப்படும். வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் 2-பக்க பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிட்டுள்ள நாளன்று நடைபெறும் நேர்காணலில் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நேர்காணலுக்கு அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.
குறிப்பு:
இந்துக்கள் மட்டுமே இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நேர்காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம்: 18-10-2021 பிற்பகல் 2 மணி
நேர்காணல் நடைபெறும் இடம்:
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. S.J.அவென்யூ. கொளத்தூர், சென்னை-99.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!