You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் 03 October 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Tamilnadu Mercantile Bank Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TMB-வங்கியில் வேலை வாய்ப்பு - ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை கடைசி..! - 1News  Nation | DailyHunt

வேலை வகை தனியார் துறை
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்





பணியிட விபரங்கள்:

1. வேளாண் அலுவலர் (Agricultural Officer)

2. சட்ட அதிகாரி (Law Officer)

3. சந்தைப்படுத்தல் அதிகாரி (Marketing Officer)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

1. வேளாண் அலுவலர் (Agricultural Officer)

i) அரசு அங்கீகரித்த கல்வி நிலையம் அல்லது பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தப்பட்சம் விவசாயத்தில் பட்டம் (Degree in Agriculture) பெற்றிருக்க வேண்டும்.

ii) Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science / Agricultural Engineering ஆகியப் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சிப் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

iii) சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் இருத்தல் விரும்பப்படுகிறது.

2. சட்ட அதிகாரி (Law Officer)

i) சட்டத்தில் பட்டம் அல்லது முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) சிவில்/டிஆர்டி வழக்குகளில் 4 வருடங்களுக்கு குறையாத காலத்திற்கு வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

iii) சட்டத் துறையில் அதிகாரியாக குறைந்தது 2 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் பணி அனுபவம் உள்ள நபர்கள் விரும்பப்படுகிறது.

3. சந்தைப்படுத்தல் அதிகாரி (Marketing Officer)

i) முதல் வகுப்பில் கலை / வணிகம் (Arts/Commerce) பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் சந்தைப்படுத்தல் / நிதி (Marketing/Finance) முதுகலை பட்டம் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ii) எந்தவொரு தனியார்/பொதுத்துறை வங்கியிலும் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் கொண்ட ஸ்கேல் I கேடரில் 2 ஆண்டுகள் சந்தைப்படுத்தல் பகுதியில் அனுபவம் கூடுதல் நன்மை.
ADC தயாரிப்புகளில் அறிவு விரும்பத்தக்கது.

வயது வரம்பு:

1. வேளாண் அலுவலர் (Agricultural Officer)

31.08.2021 தேதியின்படி 30 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2. சட்ட அதிகாரி (Law Officer)

31.08.2021 தேதியின்படி 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3. சந்தைப்படுத்தல் அதிகாரி (Marketing Officer)

31.08.2021 தேதியின்படி 35 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.





சம்பள விகிதம்:

Scale I Cadre விதியின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரம் தகுதியானவர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மெர்கண்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான விண்ணப்பிக்கும் லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.10.2021

மெர்கண்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்

இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க





🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்