தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் திருவாரூர் வேலைவாய்ப்புகள் 2021
Central University of Tamil Nadu (CUTN) Tiruvarur Recruitment 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | இமெயில் |
பணியிட விபரங்கள்:
1. திட்ட உதவியாளர் (Project Assisstant)
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சட்டப்பட்டம் (Degree in Law) படித்திருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவமும், முன்னுரிமையும் அளிக்கப்படும்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 30 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SC/ST/OBC/பெண் விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்த்தப்படும்.
சம்பள விகிதம்:
மாத ஊதியமாக அதிகப்பட்சம் ரூ. 16,000 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய தங்கள் 2-பக்க பயோடேட்டா (CV) மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு (Self Attested) அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து ஒற்றை ஆவணமாக இணைத்து (Single document) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பத்தினை இமெயில் வழியாக அனுப்பும்போது சப்ஜக்ட் என்னுமிடத்தில் ‘Application for Project Assistant’ என தெளிவாக குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் மூலம் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் இமெயில் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27-09-2021
விண்ணப்பிக்க வேண்டிய இமெயில் ஐடி:
CUTN அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
உதவிக்கு அழைக்க:
Mobile No. 9444439367
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!