தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்புகள் 2021
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department – TNHRCE Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட அறங்காவலர் குழு நியமனம் விண்ணப்பங்கள் கோரும் திருத்திய அறிவிப்பு.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால்/ நேரடி |
திருவள்ளூர் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரூ. 10,00,000/- க்கும் மிகாமல் ஆண்டு வருமானம் பெறும் சட்டப்பிரிவு 46(i) 46(ii) மற்றும் 49(i) உள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை வழிமுறை சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்திட திருவள்ளூர் மாவட்ட அறங்காவலர் நியமன குழு அரசால் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது.
மேற்படி மாவட்ட குழுவில் உறுப்பினர்கள் நியமித்திட இந்திய நாட்டின் பிரஜையாக உள்ள இந்து சமயத்தை சார்ந்த 25 வயது பூர்த்தியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. மேற்படி விண்ணப்பதாரர்கள் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 7A, 26 மற்றும் 47 ன் படி தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் விபரங்கள் நியமனம் பெறுவதற்கான படிவம் ஆகியவற்றை திருவள்ளூர் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் அலுவலகம் அல்லது திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் பூவிருந்தவல்லி இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர்கள் அலுவலகங்களில் அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளவும், தேவைப்படும் கூடுதல் விவரங்களை அறிந்துக் கொள்ளவும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 16.11.2021 மாலை 5.00 மணி
16.11.2021-ம் தேதி மாலை 5.00 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
HRCE -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத் துறை, எண். 1, சி.வி.நாயுடு சாலை, ஜெயா நகர், திருவள்ளூர்.
உதவிக்கு அழைக்க:
உதவி ஆணையர், திருவள்ளூர்.
தொலைபேசி எண்: 044 – 27661738
🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!