அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணிகை வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
வேலை வாய்ப்பு கோரும் விளம்பர அறிவிப்பு.
ந.க.எண்.175/2022/அ1/
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
கனிவான கவனத்திற்கு:
விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பை முழுவதும் கவனமாக படித்த பின்பு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிகை வட்டம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதியதாக ஏற்படுத்தப்படவுள்ள திருக்கோயில் பணியாளர்களுக்கான நிர்வாக பயிற்சி மையத்திற்கான முதல்வர் மற்றும் இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவராக மாத தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 01.08.2022 – மாலை 5.45-மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் | காலியிடங்கள் |
மருத்துவ அலுவலர் | 02 |
செவிலியர் | 02 |
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | 02 |
மொத்த பணியிடங்கள் | 06 |
கல்வித்தகுதி:
1. முதல்வர்
முதுகலை ஆசிரியராக பத்தாண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர்
i) பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
ii) அரசு/அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயப் படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
iii) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு:
1. முதல்வர்
விண்ணப்பதாரர் 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
2. இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர்
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
1. முதல்வர்
தொகுப்பூதியம் மாதம் ரூ. 35,000
2. இளநிலை உதவியாளர்/கணினி இயக்குபவர்
தொகுப்பூதியம் மாதம் ரூ. 15,000
விண்ணப்பிக்கும் முறை:
இதர விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் கீழ் குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் நேரில் வந்து கேட்டு தெரிந்தும் பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி புகைப்படத்தின் மீது அரசு அலுவலரின் சான்றொப்பம் பெற்றிருக்கவேண்டும்.
நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரியிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள், அனுபவ சான்று மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.
தேர்வு செய்யும் முறை:
வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முக தேர்வுக்கு வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
நேர்முக தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் நபரை / நபர்களை எவ்வித காரணங்களும் கூறாது நிராகரிக்க திருக்கோயில் நிர்வாகத்திற்கு உரிமை உண்டு.
விண்ணப்பதாரர் அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும் போது எடுத்து வர வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 01-08-2022 |
அதிகாரப்பூர்வ இணையதளம் | இங்கே கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு [PDF] | இங்கே கிளிக் செய்யவும் |
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர், தமிழ்நாடு அரசு – இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணிகை, திருத்தணிகை வட்டம், திருவள்ளூர் மாவட்டம் – 631 209
முக்கிய அறிவிப்பு: ஏதேனும் சந்தேகம் இருப்பின் நமது வாட்சப் குழுவில் இணைந்துகொண்டு அட்மினிடம் கேட்கவும்.
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்