You dont have javascript enabled! Please enable it!

திருப்பூர் மாவட்டம் வருவாய் துறையில் (Revenue Unit) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருப்பூர் மாவட்டம் வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வேலைவாய்ப்புகள் 2022

Recruitment of Office Assistant Posts in Tiruppur District Revenue Unit



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

திருப்பூர் மாவட்ட வருவாய் அலகில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் அரசாணை நிலை எண் 44 தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு(T2) துறை நாள் 11.03.2015-ன்படி மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பட்டியல் பெற்றும், தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டும், நேர்காணல் மூலம் நேரடி நியமனமுறையில் நிரப்பப்பட உள்ளன. எனவே தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 15.05.2022 அன்று பிற்பகல் 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்




பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

மொத்த பதவிகள் – 24 பணியிடங்கள்

கல்வித் தகுதி:

குறைந்தப்பட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2021 ஆம் தேதியின் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் (OC) 32 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்சம் SC, SC(A) / ST பிரிவினர் 37 வயது வரையும், MBC / MBC(V) மற்றும் BC / BC(M) பிரிவினர் 34 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிகளின்படி முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு 53 வரை தளர்வு உண்டு.

மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வயது வரம்பு தளர்வு உண்டு.



சம்பள விகிதம்:

மாத ஊதியமாக லெவல் 1 ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படமாட்டாது. அசல் சான்றிதழ்கள் அனைத்தும் நேர்முக தேர்விற்கு அழைக்கும்போது எடுத்துவர வேண்டும்.




விண்ணப்பிக்கும் முறை:

1) விண்ணப்பதாரர்கள் தங்களின் சுயவிவரங்கள் மற்றும் இதர விபரங்கள் ஆகியவற்றினை குறிப்பிட்டு முழுமையான வடிவத்தில் நமது இணையதளத்தில் கீழே அளிக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்தல் வேண்டும்.

2) விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களுடன் இணைத்தனுப்பப்படும் கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றுகளின் ஒளி நகலில் (குடும்ப அட்டை நகல், வேலை வாய்ப்பக பதிவு நகல், சாதி சான்று நகல், கல்வி மாற்று சான்று நகல், மதிப்பெண் சான்று நகல்) சுயசான்றொப்பமிட்டு (Self Attested) அனுப்ப வேண்டும். உரிய சான்றிதழ்கள் இன்றி பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

3) மாற்றுத் திறனாளி முன்னுரிமை கோருபவராக இருப்பின் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலரால் வழங்கப்பட்ட சான்று நகல் இணைத்து விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

4) பரிசீலனையில் விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என கண்டறியப்பட்டால் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

5) இருசக்கர வாகனம் ஓட்டத் தெரிந்தவராகவும், ஓட்டுநர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். (கட்டாயமல்ல).

6) விண்ணப்பங்களை 15.05.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் பதிவஞ்சல் / விரைவுதபால் மூலமாக கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பிடல் வேண்டும். குறிப்பிட்ட காலக் கெடுவிற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இதையும் படிங்க: திருப்பூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 22 & 25 April 2022

திருப்பூர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) & விண்ணப்பம் (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் எனில், இப்பதவிக்கு விண்ணப்பித்தல் கூடாது, விண்ணப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பங்கள் பரிசீலனை நிலையிலேயே நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர்,
வருவாய் துறை (அ-பிரிவு)
அறை எண்.224, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604.



8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்