You dont have javascript enabled! Please enable it!

திருநெல்வேலி மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 July 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்புகள் 2022

The Tamil Nadu Fisheries Development Corporation Limited – TNFD Recruitment Notification 2022



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. மீன்வள உதவியாளர் – 2 பதவிகள்

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

i) தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.

ii) நீச்சல், மீன்பிடிப்பு. வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.

iii) மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

வயது வரம்பு:

வயது வரம்பு 13.09.2021 அன்றுள்ளபடி கணக்கிடப்படும்.

i) ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அருந்ததியர்கள்) மற்றும் பழங்குடி வகுப்பினர் குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 37 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) 18 வயது முதல் அதிகப்பட்சம் 34 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) இதர வகுப்பினர் (மேற்கண்ட வகுப்பை சாராதவர்கள்) 18 வயது முதல் அதிகப்பட்சம் 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iv) சிறப்பு சலுகை உள்ளவர்கள் முன்னாள் இராணுவத்தினர், விதவைகள், போரில் கணவனை இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் (எல்லா வகுப்பினர்களும் தகுதியுடையவர்கள்) நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி சலுகை அளிக்கப்படும்.




சம்பள விகிதம்:

மாத சம்பளவிகிதம் குறைந்தப்பட்சம் ரூ. 15,900 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,400 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைத்து தகுதியான விண்ணப்பதாரர்களும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். வகுப்பு மற்றும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகித தரவரிசைப்படி தேர்வு செய்யப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.

அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நாளன்று நடைபெறும் நேர்காணல்/ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக தேர்வுக் குழு முன் ஆஜராக வேண்டும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட 2 பணியிடங்களுக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தினை புகைப்படத்துடன் நிரப்பி விண்ணப்பத்துடன்‌ தேவையான உரிய நகல் ஆவணங்களுடன் அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் கண்ட முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒரு விண்ணப்பதாரர் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்பலாம். ஒன்றுக்குமேல் பெறப்படும் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2022 அன்று மாலை 5.00 மணிக்குள்

விண்ணப்பம் பெற/அனுப்ப வேண்டிய முகவரி:

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
உதவி இயக்குநர்
மணிமுத்தாறு
அம்பாசமுத்திரம் தாலுகா
திருநெல்வேலி – 627421
போன்

உதவிக்கு அழைக்க:

தொலைபேசி எண். 04634 -290807

TNFDC அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம்  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்

பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்




இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்