You dont have javascript enabled! Please enable it!

திருநெல்வேலி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 13 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருநெல்வேலி மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tirunelveli Public Health Department (District Health Society) Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தேசிய சுகாதார திட்டத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாவட்ட நலச்சங்கம் (District Health Society) துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்பட்டு வரும் கீழ்க்கண்ட திட்டங்களில் ஒப்பளிக்கப்பட்ட கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால் (அ) இமெயில்

பணியிட விபரங்கள்:

01. ஆய்வக உதவியாளர்

02. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்

03. நுண்ணுயிரியல் வல்லுநர்

04. துணை செவிலியர் மருத்துவச்சி

05. உளவியலாளர்

06. துப்புரவாளர்

07. வாகன ஓட்டுனர்

08. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

09. பல் உதவியாளர்

10. மருந்தாளுநர்

11. குளிர்சாதன மெக்கானிக்

கல்வித் தகுதி:

01. ஆய்வக உதவியாளர்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி

02. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்

குறைந்தபட்சம் டிஎம்எல்டி (DMLT)

03. நுண்ணுயிரியல் வல்லுநர்

i).MBBS., MD (மைக்ரோபயாலஜி)

ii). 2 வருட ஆய்வக அனுபவத்துடன் MBBS

அல்லது

எம்.எஸ்சி. மருத்துவ நுண்ணுயிரியல்

04. துணை செவிலியர் மருத்துவச்சி

தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பொது நர்சிங் & மருத்துவச்சியில் பட்டம் அல்லது டிப்ளமோ

05. உளவியலாளர்

i). உளவியலில் முதுகலை பட்டதாரி அல்லது MSW

அல்லது

உளவியலில் பட்டதாரி மற்றும் ஆலோசனை சேவைகளில் 2 வருட அனுபவத்துடன் ஆலோசனையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

06. துப்புரவாளர்

எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

07. வாகன ஓட்டுனர்

8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்று கட்டாயம் 2 ஆண்டுகள் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.. முன் அனுபவம் தேவை

08. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

09. பல் உதவியாளர்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் சுகாதாரத்தில் அனுபவம் தேவை

10. மருந்தாளுநர்

மருந்தகத்தில் டிப்ளமோ மற்றும் பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

11. குளிர்சாதன மெக்கானிக்

ரெஃப்ரிஜரேஷன் மெக்கானிக் & ஏர் கண்டிஷனிங்கில்ஐடிஐ சான்றிதழ் படிப்பு மற்றும் 1 வருட அனுபவம்.

வயது வரம்பு:

குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி அதிகப்பட்சம் மாத தொகுப்பூதியமாக கீழ்கண்டவாறு வழங்கப்படும்.

01. ஆய்வக உதவியாளர்

ரூ. 8000

02. ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர்

ரூ. 12000

03. நுண்ணுயிரியல் வல்லுநர்

ரூ. 25000 – ரூ. 40000

04. துணை செவிலியர் மருத்துவச்சி

ரூ. 14000

05. உளவியலாளர்

ரூ. 13000

06. துப்புரவாளர்

ரூ. 6500

07. வாகன ஓட்டுனர்

ரூ. 9000

08. பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்

ரூ. 8500

09. பல் உதவியாளர்

ரூ. 10000

10. மருந்தாளுநர்

ரூ. 15000

11. குளிர்சாதன மெக்கானிக்

ரூ. 20000

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோட் செய்துகொள்ளலாம் அல்லது  விண்ணப்ப படிவங்கள் அருகிலுள்ள மாவட்ட துணை சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் மற்றும் வட்டார சுகாதார நிலையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பத்தில் புகைப்படம் ஒட்டி நிரப்பி அத்துடன் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post)/ மின்னஞ்சல் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.

இதையும் படிங்க: திருநெல்வேலி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 April 2022

விண்ணப்பிக்க கடைசிநாள்: 13.04.2022

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இமெயில் ஐடி:

மின்னஞ்சல் முகவரி (E-mail Id): dphtnveinic.in

(அல்லது)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் {District Health Society)
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி – 627 002

மாவட்ட அரசு இணையத்தளம் (Dist Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் விண்ணப்பங்களை (Official Notifications & Application Forms) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்