You dont have javascript enabled! Please enable it!

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 May 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

திருச்சிராப்பள்ளி மாவட்ட நலச்சங்கம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022

Tiruchirappalli Public Health Department (District Health Society) Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சுகாதாரப்பணிகள் திருச்சிராப்பள்ளி மாவட்ட துணை இயக்குநர் அலுவலகத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் 5 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட விபரங்களின்படி தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் 20.05.2022 முதல் பெற்றுக்கொள்ளலாம். 31.05.2022 மாலை 5.00 மணிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. குளிர்பதன மெக்கானிக் (Refrigerator Mechanic )

2. ஐடி ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator- LIMS)

3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

4. கணக்கு உதவியாளர் (Account Assistant)

5. ஊர்தி ஓட்டுநர் (MMU – Driver)

கல்வித் தகுதி:

1. குளிர்பதன மெக்கானிக் (Refrigerator Mechanic )

ஒரு வருட அனுபவத்துடன் தொழிற்துறை பயிற்சி நிறுவனம் (ஐடிஐ) குளிர்பதன மெக்கானிக் (ம) குளிரூட்டி படிப்பு பற்றிய அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.

2. ஐடி ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator- LIMS)

முதுகலை கணிணி பயன்பாடு படிப்பு/ இளங்கலை பொறியியல், துறை சார்ந்த ஒரு வருட முன் அனுபவம்.

3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

இளங்கலை கணிணி அறிவியல் படிப்பு/ கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு/ முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.

4. கணக்கு உதவியாளர் (Account Assistant)

இளங்கலை வணிகவியல் கணிணி அறிவு இருக்க வேண்டும்,

5. ஊர்தி ஓட்டுநர் (MMU – Driver)

எட்டாவது தேர்ச்சி (ம) கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 2 வருட முன் அனுபவம்.

வயது வரம்பு:

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 30.05.2022 தேதியில் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் வழிக்காட்டுதல்படி கீழ்கண்டவாறு மாத தொகுப்பூதியம் வழங்கப்படும்.

பதவியின் பெயர் மாத ஊதியம்
1. குளிர்பதன மெக்கானிக் (Refrigerator Mechanic ) ரூ. 20,000
2. ஐடி ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator- LIMS) ரூ. 16,500
3. தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) ரூ. 10,000
4. கணக்கு உதவியாளர் (Account Assistant) ரூ. 12,000
5. ஊர்தி ஓட்டுநர் (MMU – Driver) ரூ. 8,000

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.




விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் இருந்து டவுண்லோட் செய்துகொள்ளலாம். புகைப்படத்துடன் விண்ணப்ப படிவத்தை நிரப்பி அத்துடன் அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக விண்ணப்பங்கள் தபால் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.05.2022, செவ்வாய்கிழமை மாலை 5.00 மணி வரை.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, ஜமால் முகம்மது கல்லூரி அருகில், வு.ஏ.ளு. டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020.

திருச்சி மாவட்ட அரசு இணையத்தளம் (Dist Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

திருச்சி  மாவட்ட அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Dist Official Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்

[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தினை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்