You dont have javascript enabled! Please enable it!

தமிழ்நாடு அரசு தொழில்துறை முதலீட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வேலைவாய்ப்புகள் 2021
The Tamilnadu Industrial Investment Corporation Ltd – TIIC Recruitment 2021




வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (ஒரு மாநில அரசு நிறுவனம்) கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

தமிழக அரசு தொழில் முதலீட்டு துறையில் வேலைவாய்ப்பு 2021 | TIIC Recruitment  2021

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிட விபரங்கள்:

1. விற்பனை நிர்வாகி (Marketing Executives)

மொத்த எண்ணிக்கை: பல்வேறு

பணியிடங்கள்:  சென்னை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், திருப்பூர், குறிச்சி, கரூர், திண்டுக்கல், காரைக்குடி, தூத்துக்குடி, சிவகாசி, திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம்/ நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 21 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 33 வயதிற்கும் உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BC-M/ BC-OBCM/ MBC/ MBC&DNC/ MBC(V) பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் மற்றும் SC/ SCA/ ST பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் அதிகப்பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.




சம்பள விகிதம்:

நிலையான சம்பளம் மாதம் ரூ. 25,000/- மற்றும் கூடுதலாக விதிமுறைகளின்படி ஊக்கத்தொகைகள் மற்றும் பயணப்படிகள் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பம்/தேர்வு கட்டணம் எதுவுமில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் TIIC இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான லிங்க் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே ஆன்லைன் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

ஆன்லைன் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே ஆன்லைன் தேர்விற்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

பொருட்கள்/ சேவைகள் துறை சார்ந்த நிதி சந்தைப்படுத்தலில் 2 வருட அனுபவம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் சிறந்த தகவல் தொடர்பு திறன் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

Ms-word/ Excel/ Power point போன்றவற்றில் திறன் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்:07-11-2021

TIIS -ன் அதிகாரப்பூர்வ இணையதளம் இங்கே கிளிக் செய்யுங்கள்

 இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்