You dont have javascript enabled! Please enable it!

வருவாய்த்துறை – தேனி மாவட்டம் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 18 March 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் வருவாய்த்துறை வேலைவாய்ப்புகள் 2022

Theni District Uthamapalayam Taluk Village Assistant Recruitment Notification 2022



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்






முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

2020-2021 மற்றும் 2021-2022ம் ஆண்டிற்கான கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் காலியாக உள்ள 08 (எட்டு) பணியிடங்களில் இனச்சுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத்தேர்விற்கு 18.03.2022 அன்று வரை மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்/ நேரில்

பணியிட விபரங்கள்:

1. கிராம உதவியாளர்

மொத்த பணியிடங்கள்: 08 பதவிகள்

கல்வித் தகுதி:

குறைந்தபட்ட கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 01.07.2021 ஆம் தேதியின்படி குறைந்தப்பட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், பொது பிரிவினர் 32 வயது மேற்படாதவராகவும், BC/ MBC/ DNC பிரிவினர் 34 வயது மேற்படாதவராகவும், SC/ ST பிரிவினர் 37 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கான வயது வரம்பு தளர்வு அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படும்.




சம்பள விகிதம்:

மாத ஊதியமாக சம்பள ஏற்றமுறை குறைந்தப்பட்சம் ரூ. 11,100 அதிகப்பட்சம் ரூ. 35,100 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும். எழுத்துத்தேர்விற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) பின்னர் தனியே நேரில் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கம் சான்றிதழ் சரிபார்த்தலுக்கும் தங்களது சொந்த செலவில் வரவேண்டும். தேர்வு மையங்களை மாற்றக்கோரும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன இட ஒதுக்கீட்டு விதியைப் பின்பற்றி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.




விண்ணப்பிக்கும் முறை:

இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முககவரிக்கு ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை/ ஆதார் அட்டை/ குடும்ப அட்டை/ ஓட்டுநர் உரிமம் ஆகியவற்கை சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு தபால் மூலமாகவோ, நேரிலோ அனுப்பலாம். ஒன்றுக்கு மேற்பட்டு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

சமீபத்தில் எடுக்ககப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தில் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு புகைப்படத்தின் மேல் பகுதியில் சான்றொப்பத்துடன் விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டும்.

அனைத்து சான்றாவணங்களின் நகல்கள் மட்டுமே உரிய முறையில் சான்றறொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டு அனுப்பப்பட வெண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கக்கூடாது. விண்ணப்பங்கள் கீழ்க்காணும் முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரிலோ அனுப்பப்படவேண்டும். விண்ணப்பங்கள் அனுப்பப்படும் அஞ்சல் உறை மீது “கிராம உதவியாளர் பணிக்கான நேரடித்தேர்வு மார்ச் 2022” தெளிவாகக் குறிப்பிடவேண்டும்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 18.03.2021 மாலை 5.45 மணி

18.03.2022 அன்று 5.45 மணிக்குள் வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

தேனி மாவட்டம் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பம் (Official Notification & Application Form) டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:

வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், உத்தமபாளையம்.




🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்