தேனி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Theni Disaster Management Committee Recruitment notification 2022 for Junior Assistant and Office Assistant Posts, Apply Offline
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தேனி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிற்கு ஒப்பளிக்கப்பட்டள்ள கீழ்காணும் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் 30.04.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை | தமிழ்நாடு அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. இளநிலை உதவியாளர்
2. அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி:
1. இளநிலை உதவியாளர்
10-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினி இயக்குவதில் முன் அனுபவச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
2. அலுவலக உதவியாளர்
எட்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
குறைந்தப்பட்சம் 20 வயது முதல் அதிகப்பட்சம் 50 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. இளநிலை உதவியாளர்
மாத தொகுப்பூதியம் ரூ. 13,000
2. அலுவலக உதவியாளர்
மாத தொகுப்பூதியம் ரூ. 9,100
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பதவிகளுக்கு தகுதிபெற்ற நபர்கள் விண்ணப்பத்தினை நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்களது விண்ணப்பம், கல்வி மற்றும் தகுதிச் சான்றிதழ் நகல்கள் மற்றும் முகவரி பூர்த்தி செய்யப்பட்டு புகைப்படம் ஒட்டிய ஆளறிச்சான்றிதழ் (மாதிரி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது), சுயமுகவரியிடப்பட்ட அஞ்சல் உறை (அந்த உறையில் ரூ.25/- ரூபாய்க்கான தபால் அஞ்சல் (Postal Stamp) ஒட்டப்பட்டிருக்க வேண்டும்) ஆகியவற்றினை கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு பதிவஞ்சல் / விரைவஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், விண்ணப்பங்கள் அனுப்பும் உறையின் மேல் “தேனி மாவட்டம்- பேரிடர் மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிகப் பணியிடங்களுக்கான விண்ணப்பம்- 2022” என எழுதி அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருநெல்வேலி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 April 2022
விண்ணப்பிக்க கடைசிநாள்: 30.04.2022
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி
மாவட்ட அரசு இணையத்தளம் (Dist Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!