You dont have javascript enabled! Please enable it!

அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 05 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மருத்துவ கல்வித்துறை அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்புகள் 2021.

Government of Medical Education Thanjavur Medical College Hospital Recruitment Notification 2021



வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்

டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு:

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

மருத்துவ கல்வித்துறை அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை தமிழ்நாடு அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்

பணியிட விபரங்கள்:

1. அவசர துறை செயலாளர் (Emergency Department (ED) Secretary)

2. பதிவு உதவியாளர் (Trauma Registry Assistant)

3. OT டெக்னீஷியன் (OT Technician)

கல்வித் தகுதி:

1. அவசர துறை செயலாளர் (Emergency Department (ED) Secretary)

இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மருத்துவ உதவியாளர் இளங்கலை பட்டம் (Bachelor Degree in Accident and Emergency care Physician Assistant) பெற்றிருக்க வேண்டும்.

2. பதிவு உதவியாளர் (Trauma Registry Assistant)

டிப்ளமோ அல்லது டிகிரி நர்சிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கணினி இயக்கும் திறன் இருக்க வேண்டும்.

3. OT டெக்னீஷியன் (OT Technician)

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / நிறுவனத்தில் குறைந்தப்பட்சம் 3 மாதத்திற்கும் குறையாத கால அளவை கொண்ட OT டெக்னீஷியன் கோர்ஸ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகப்பட்சம் வயது வரம்பு 50 -க்குள் இருக்க வேண்டும்.




சம்பள விகிதம்:

1. அவசர துறை செயலாளர் (Emergency Department (ED) Secretary)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 20,000 வழங்கப்படும்.

2. பதிவு உதவியாளர் (Trauma Registry Assistant)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 10,000 வழங்கப்படும்.

3. OT டெக்னீஷியன் (OT Technician)

மாநில சுகாதாரச் சங்கம் – NTEP-ன் வழிக்காட்டுதல்படி ஒப்பந்த ஊதியமாக மாதம் ரூ. 15,000 வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.



விண்ணப்பிக்கும் முறை:

i) புகைப்படத்துடன் கூடிய பயோடேட்டாவுடன் விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதிக்கான அனைத்து சான்றிதழ்களின் (கல்வி சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் முன் அனுபவ சான்றிதழ் ஆகியவற்றின் நகல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ii) அடிப்படைத்தகுதியில் ஏதாவதொரு சான்றிதழ் விடுபட்டு இருந்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

iii) விண்ணப்பங்கள் அனுப்பப்படும் தபால் உறையின் மேல் பதவியின் பெயரைக் குறிப்பிட்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடத்திற்கான விண்ணப்பம் என்று குறிப்பிடப்பட வேண்டும். மற்றும் பதிவு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.

விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வதும், நிராகரிக்கப்படுவதும் DHS – NTEP-யின் அதிகாரத்திற்குட்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 05.11.2021 மாலை 05.00 மணி.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

முதல்வர், அரசு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்

 மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்



🔔இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்