You dont have javascript enabled! Please enable it!

TC – தமிழ்நாடு ஜவுளி குழு (டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசிநாள்: 24 December 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

சென்னை, திருப்பூர், கோவை, கரூர் டெக்ஸ்டைல்ஸ் குழு வேலைவாய்ப்புகள் 2021

The Textiles Committee Recruitment 2021




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

இந்திய அரசாங்கத்தின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான டெக்ஸ்டைல்ஸ் கமிட்டி, டெக்ஸ்டைல்ஸ் கமிட்டியின் ஆய்வகங்களில் சக (டெக்ஸ்டைல் ​​டெஸ்டிங்) ஈடுபடுவது, ஜவுளி சோதனையில் விண்ணப்பதாரர்களின் திறன்களை வழங்குவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டாளிக்கு (TT) ஜவுளி சோதனையின் பல்வேறு அம்சங்கள் மற்றும் சோதனை தரவுகளின் பகுப்பாய்வு பற்றிய ஆழமான பயிற்சி அளிப்பது மற்றும் ஜவுளி சோதனையின் தர அம்சங்களில் விரிவான புரிதலையும் அனுபவத்தையும் பெறுவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது. புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தற்காலிகமாக தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. ஃபெலோ (டெக்ஸ்டைல் ​​டெஸ்டிங்) [Fellow (Textile Testing)]

கல்வித்தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் B.Sc Physics (அ) Chemistry அல்லது B.Tech in Textile Technology ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (31-10-2021 -ன் படி):

குறைந்தப்பட்சம் 21 வயது முதல் அதிகப்பட்சம் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்.

மேலும் வயது வரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும்.





சம்பள விகிதம்:

மாத தொகுப்பூதியமாக அதிகப்பட்சம் ரூ. 15,000 வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை நமது இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்பப் படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் சுய சான்றொப்பமிட்டு (Self Attested) குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு முன்பாக கிடைக்குமாறு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை ஏதேனும் ஒரு பிராந்தியத்திற்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவம் சரியான தகவல்களுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். குறைபாடு உடைய, முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தவறான தகவல்களை அளித்துள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.




தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 24-12-2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரிகளின் தொகுப்பு இந்த வேலைவாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் [PDF] கீழே (Official Notification) கொடுக்கப்பட்டுள்ளது.

TC -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Official Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்