தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
Tamil University Thanjavur Recruitment Notification 2022
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் காலியாகவுள்ள பின்வரும் பணியிடத்தினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி தேதி 11.02.2022 ஆகும். விண்ணப்பிக்கும் முன்னர் விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட தகவல்களை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. கௌரவ உதவிப்பேராசிரியர் ஆங்கிலம் (சுயநிதி) Guest Lecturer – English (Self Finance)
கல்வித் தகுதி:
கல்வித்தகுதி பல்கலைக்கழக நல்கைக்குழுவின் விதிமுறைக்கு உட்பட்டதாகும். ஆங்கிலப் பாடத்தில் முதுகலையில் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலப் பாடத்தில்
NET/ SLET/ Ph.D.,(Awarded) உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
கௌரவ உதவிப்பேராசிரியரின் மாதத் தொகுப்பூதியம் ரூ. 18000/- மட்டுமே ஆகும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
இந்நியமனம் மற்றும் நேர்காணல் பல்கலைக்கழக விதிமுறைகளுக்குட்பட்டது. தமிழக அரசின் 200 புள்ளி இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை (இரு நகல்கள்) நிரப்பி 11.02.2022 க்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். வயது, சாதி, கல்வித்தகுதி (மதிப்பெண், சான்றிதழ்கள்) பணி அனுபவச் சான்றிதழ்களின் ஒரு நகல் இணைக்கப்பட வேண்டும். நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் வழி தகவல் தெரிவிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தவறாமல் மின்னஞ்சல் முகவரியை விண்ணப்பத்தில் குறிப்பிடுதல் வேண்டும்.
தேர்வுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவிலான இரண்டு நிழற்படங்கள் கொண்டு வர வேண்டும்.
நேர்முகத்தேர்வு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் செயலகத்தில் நடைபெறும்.
நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்காக 1 மணி நேரம் முன்னதாக வருதல் வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2022
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
பதிவாளர் (பொ) அவர்கள்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613 010
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுஙகள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள் இங்கே கிளிக் செய்யுங்கள்