You dont have javascript enabled! Please enable it!

TN NCC – மதுரை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 06 April 2022

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

Tamilnadu NCC Department Recruitment 2022

தேசிய மாணவர் படை தமிழ்நாடு வேலைவாய்ப்புகள் 2022

National Cadet Corps (NCC) Tamil Nadu Recruitment 2022




நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

வேலை வகை மத்திய அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. அலுவலக உதவியாளர்

2. சௌகிதார்

கல்வித்தகுதி:

1. அலுவலக உதவியாளர்

குறைந்தப்பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. சௌகிதார்

குறைந்தப்பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் முன்னால் படைவீரருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

01-07-2021 -ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 30 வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருக்க கூடாது.

i) SC’s, SC (A)s, STs பிரிவினர் அதிகப்பட்சம் 37 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

ii) MBCs/DCs, BCs, BCMs பிரிவினர் அதிகப்பட்சம் 34 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iii) SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs and BCMs ஆகிய பிரிவினர்கள் தவிர்த்து மற்றவர் 32 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

iv) SC/ST/BC/MBC பிரிவுகளை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 53 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

v) SC/ST/BC/MBC பிரிவினர்களை சேராத முன்னாள் ராணுவ வீரர்கள் 48 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.




சம்பள விகிதம்:

1. அலுவலக உதவியாளர்

மாத ஊதியமாக ஊதிய நிலை 1 -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.

2. சௌகிதார்

மாத ஊதியமாக ஊதிய நிலை 1 -ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 15,700 முதல் அதிகப்பட்சம் ரூ. 50,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன்பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.

நேர்காணல் செயல்முறை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள்

i) இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்ப படிவத்தை டவுண்லோட் செய்து புகைப்படத்துடன் அதனை சரியாக நிரப்பவும்.

ii) சுய விபரங்களுடன்‌ கூடிய விண்ணப்பத்துடன்‌ தேவையான அனைத்து ஆவணங்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும்‌ வகையில்‌ பதிவு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌.

iii) விண்ணப்ப உறையின் மீது கட்டாயமாக எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிடும் விதமாக “Application form for the post of Office Assistant” அல்லது “Application form for the post of Chowkidar” என்று தெளிவாக குறிப்பிட்டு அனுப்பவும். இவ்வாறு குறிப்பிடப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

iv) எந்த செய்தித்தாளில் இந்த வேலைவாய்ப்பிற்கான விளம்பர அறிவிக்கை வந்தது என்னுமிடத்தில் Dailythanthi Madurai ( கோவை தினத்தந்தி) என்றும் தேதி 07-03-2022 என்றும் குறிப்பிடவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06-04-2022 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Officer Commading
4 (TN) Engr Coy NCC
NCC Training Academy
Idayapatti – 625 110
Madurai North, Madurai

 NCC -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website) இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ செய்தித்தாள் அறிவிப்பு (Official Newspaper Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பின் விண்ணப்பத்தினை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

சௌகிதார் வேலைவாய்ப்பின் விண்ணப்பத்தினை (Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்




இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
error: Alert: Content is protected !!
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்