சேலம் ரயில்வேயில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு உதவித் தொகையுடன் அப்ரண்டிஸ் பயிற்சி 2021
Southern Railway, Salem Apprenticeship Notification 2021
நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
தெற்கு ரயில்வேயின் சேலம் மண்டலத்தில் புதிதாக தொழிற்பயிற்சி (Apprenticeship) வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. தொழிற்பயிற்சி அடிப்படையில் தற்காலிகமாக 1 வருடத்திற்கு மட்டும் ஊக்கத்தொகை ஊதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலை வகை | மத்திய அரசு |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிட விபரங்கள்:
1. பிட்டர் – 30 + 30 = 60 பதவிகள்
2. டர்னர் – 5 பதவிகள்
மொத்த பணியிடங்கள்: 65 பதவிகள்
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தப்பட்சம் 14 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பள விகிதம்:
1. பிட்டர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் ஊக்கத்தொகையாக மாதம் குறைந்தப்பட்சம் ரூ. 6,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 7,000/- வரை வழங்கப்படும்.
2. டர்னர்
ஒப்பந்த நியமன அடிப்படையில் ஊக்கத்தொகையாக மாதம் குறைந்தப்பட்சம் ரூ. 6,000/- முதல் அதிகப்பட்சம் ரூ. 7,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் 10 ஆம் வகுப்பு கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு செய்தி அவர்களின் இமெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் NATS இன் அதிகாரப்பூர்வ இணையத்தளமான https://apprenticeshipindia.org/ என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். NATS இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
1) https://apprenticeshipindia.org க்குச் செல்லவும்.
2. மெனுபாரில் Register என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்து Candidate என்பதை கிளிக் செய்யவும்.
4) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Submit கொடுக்கவும்.
5) தற்பொழுது உங்களுக்கு ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும்.
தயவுசெய்து கவனிக்கவும்:
பதிவு சரிபார்ப்பு மற்றும் ஒப்புதல் வழங்கி ஒரு தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைக்க தயவுசெய்து குறைந்தது ஒரு நாளாவது காத்திருங்கள்.
தனிப்பட்ட பதிவு எண் (Enrollment Number) கிடைத்தப்பின்னர்
1) https://apprenticeshipindia.org க்குச் செல்லவும்.
2) Login செய்யவும்.
3) Resume அப்லோடு செய்யவும் (தேவைப்படின் மட்டும்).
1. பிட்டர் – விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
1.1 பிட்டர் – விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. டர்னர் – விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
4) Apply for this Opportunity என்பதைக் கிளிக் செய்யவும்.
5) மீண்டும் apply என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23-12-2021
NAPS -ன் அதிகாரப்பூர்வ அரசு இணையத்தளம் இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!