You dont have javascript enabled! Please enable it!

SCD – தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல ஆணைய அலுவலகங்களில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 15 November 2021

இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..

மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் சென்னை வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2021

Commissionerate for Welfare of the Differently Abled, Chennai – SCD Recruitment Notification 2021



நமது வாட்ஸ்அப் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்

நமது டெலிகிராம் குரூப்பில் சேர கீழே கிளிக் செய்யுங்கள்





முக்கிய குறிப்பு

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.

சென்னை மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு மையத்தில் வேலைவாய்ப்பு - YouTube

வேலை வகை தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை தபால்





பணியிட விபரங்கள்:

1. செயல்திறன் உதவியாளர் நிலை-II (Skilled Assistant Grade II)

கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:

a) 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

b) தொழில்நுட்ப கல்வி தகுதி சான்றிதழ் (D.T.E.) இருக்க வேண்டும்.

c) அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையம் / நிறுவனத்திலிருந்து Foot Wear Manufacturing Course முடித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

01-07-2021- ன் படி குறைந்தப்பட்சம் 18 வயது முதல் அதிகப்பட்சம் 30 (OC பிரிவினர்) வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BC / MBC பிரிவினர் அதிகப்பட்சம் 34 வயது வரையும், SC / SCA / ST பிரிவினர் அதிகப்பட்சம் 37 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.





சம்பள விகிதம்:

தமிழக அரசின் ஊதிய விகிதம் நிலை 8-ன் படி குறைந்தப்பட்சம் ரூ. 19,500 முதல் அதிகப்பட்சம் ரூ. 71,900 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணமும் இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.





விண்ணப்பிக்கும் முறை:

மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள்

கீழே கொடுக்கப்பட்டு லிங்கில் சென்று விண்ணப்பத்தினை டவுண்லோடு செய்து விண்ணப்பத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஓட்டப்பட வேண்டும்.

விண்ணப்பத்துடன் இருப்பிடச்சான்று, சாதிச்சான்று உட்பட விண்ணப்பிக்கும் பதவிக்குரிய கல்விச்சான்றிதழ் நகல்கள் சுயசான்றொப்பம் (Self Attested) இடப்பட்டு இணைத்தனுப்பப்பட வேண்டும்.

தபால் உறையின் மேல் APPLICATION FOR THE POST OF SKILLED ASSISTANT என பதவியின் பெயரை கட்டாயம் குறிப்பிடவேண்டும்.

விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்.

ஒரு பதவிக்கு ஒரு நபரிடமிருந்து ஒரு விண்ணப்பம் மட்டும் அளிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

மேற்குறிப்பிட்ட பதவிகளின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணையும் இணைத்து அனுப்ப வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் நேர்காணலுக்கான தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15-11-2021

SCD – ன் அதிகாரப்பூர்வ இணையத்தளம் (Official Website)  இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் ஆங்கிலம் (Official Application English) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

அதிகாரப்பூர்வ விண்ணப்பம் தமிழ் (Official Application Tamil) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

State Commissioner, Commissionerate for the Welfare of Differently Abled, Lady Willington College Campus, No.5, Kamarajar Salai, Chennai-5

அரசு வங்கிகளில் வேலைவாய்ப்பு 2021 | 4135 பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள் 11 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

SIDBI – சென்னை இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள் 21 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

IBPS – அரசு வங்கிகளில் வேலைவாய்ப்பு | 1828 சிறப்பு அதிகாரிகள் (Specialist Officers – SO) பணியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி நாள்: 23 November 2021 விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்





இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!





இந்த மிக முக்கிய தகவலை மிக அதிகமாக ஷேர் செய்யுங்கள். வேலைத்தேடி கஷ்டப்படும் யாருக்காவது உதவும். ப்ளீஸ்..
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
[PDF] செய்தித்தாள்கள் & வார/மாத இதழ்கள் டவுண்லோட் செய்ய
இங்கே கிளிக்